
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் அண்மையில் அரசாங்க அமைச்சர் ஒருவர் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் வெளிவந்திருந்தது.
இதனை தொடர்ந்து, கிளிநொச்சியில் பணியாற்றி வருகின்ற சுயாதீன ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் குறித்த செய்தி தொடர்பில் கடும் ஆட்சேபனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியினால் அமைச்சருக்கு ஏதேனும் நடந்தால் தான் குண்டு வைக்கக் கூட தயங்க மாட்டேன் எனவும் ஊடகவியலாளருக்கு தொலைபேசி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த செய்தி அனைத்து ஊடகங்களில் வெளிவந்தது, இருந்த போதும் இனந்தெரியாத தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் ஆங்கிலம் ஊடகம் ஒன்றை சுட்டிக்காட்டி அதில் ஊடகவியலாளரின் பெயருடன் செய்தி வெளிவந்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு அனைத்து ஆயுதங்களும் பயன்படுத்த தெரியும் எனவும் இதுவரை 36 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர், நீ 37ஆவதாக மாறுவாய் எனவும் தொலைபேசியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று(31) பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment