வவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர் எழுச்சி நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.தமிழ்மக்களின் உரிமை போராட்டத்திற்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய வீர மறவர்களுக்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இவ் நினைவேந்தல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
நேற்று மாலை 06.05 க்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வீர மறவர்களை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



No comments
Post a Comment