Latest News

November 16, 2016

புலிகள் கபடத்தனமாக செயற்பட்டனராம்-சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு(காணொளி)
by admin - 0


 
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் 
திரு சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு முன்னாள் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் நூல் அறிமுகவிழா ஒன்றில் உரையாற்றும்போது விடுதலைப்போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தியதோடு புலிகள் அவரை கபடத்தனமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியதோடு. போராளிகளின் விருப்பம் இன்றி அவர்களை தவறாக வழிநடாத்தி அவர்களது விருப்பத்துக்கு மாறாக பயன்படுத்தியதாகவும் யாருடைய தூண்டுதலின் பேரிலேயே இருதரப்பினரும் போரிட்டு இழப்புக்களை சந்தித்ததாகவும் பேசி விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டையும் அதன்பால் போரிட்டு மடிந்தவர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

அவர் அங்கு மேலும் பேசும்போது  நீங்கள் செய்யவேண்டியது சனசமூக நிலையத்தை ஒழுங்காக நடத்துவது அல்லது கஸ்டப்படுவர்களுக்கு உதவி செய்வதுதான் அதை விடுத்து கிடைக்காத ஒன்றுக்காக ஆசைகாட்டித் தூண்டக் கூடாது. உசுப்பேத்திக் கதைக்கக் கூடாது. இது உண்மையிலேயே பாரிய பிரச்சினைகளை சமூகத்தில் உருவாக்கும். மீண்டும் தோற்றவர்களையும் குற்றவாளிகளையும் உருவாக்கிவிடும். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலக அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைகள் எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். பூகோள அரசியலை விளங்கிக்கொள்ளவேண்டும் எனவும் பாடம் எடுத்திருந்தார்.மேலும் போர் என்பது ஒருபோதும் நீதியாக நடைபெறாது. போரில் ஈடுபடுகிற தரப்பில் யார் முந்திக்கொள்வது என்றுதான் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இருதரப்பும் போரைச் செய்தபோது நாங்கள் உண்மையிலே சுகாதார ஊழியர்கள் கடுமையான ஒரு சவாலை எதிர்நோக்கினோம். போரில் ஈடுபட்ட இருதரப்பும் தங்கள் தேவைகளுக்காக அவர்களை ஒப்புதல் இல்லாமல் தினசரி அவர்களை வதைத்து அவர்களை தீயவழியில் செல்வதற்கு அல்லது கபடத்தனமாக அவர்களைப் பாவித்தும் உள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நான் கூடப் போய்வருகிறபோது கூட சில பொருட்களைக் கொண்டு வருமாறு கேட்பார்கள். இவ்வாறு சம்பவங்கள் கபடத்தனமாக நடைபெற்றபோது அதில் சிக்கிக்கொண்ட ஒருவர் தான் இந்தச் சதீஸ் சாரதிகளுக்கு நெருக்கடி இதில் எங்கள் சாரதிகள் கபடத்தனமாக பாவிக்கப்பட்டார்கள்.


இருதரப்பும் போரை நியாயமாகச் செய்யவில்லை. உண்மையிலேயே போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இங்கே சுமந்திரன் அவர்கள் வந்திருக்கிறார். அவரை இங்கே பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. உண்மையை கதைக்க வேண்டும் விஞ்ஞானபூர்வமாகக் கதைக்க வேண்டும். இலங்கை ஒரு சின்னத் தீவு. இங்கே சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் பறங்கியர் எனப் பல இனங்கள் இருக்கின்றன. உலகத்தில் வளர்ந்த நாடுகள் எவ்வாறு தமக்கிடையிலான உறவுகளையும் இனங்கள் எவ்வாறு தனித்துவங்களைக் காப்பாற்றிக்கொள்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். என தனது உரையில் மென்வலு சுமந்திரனுக்காக உரையாற்றினார்.

இவற்றைவிடுத்து 30வருட காலமாக நாங்கள் ஒன்றுக்காகச் சண்டைபிடித்த பலரை இழந்து நிற்கும்போது நாம் உசுப்பேத்திக் கதைப்பது அல்லது உண்மையை மறைத்துக் கதைப்பது மிகவும் குற்றமான செயல். நீங்கள் செய்யவேண்டியது சனசமூக நிலையத்தை ஒழுங்காக நடத்துவது அல்லது கஸ்டப்படுவர்களுக்கு உதவி செய்வதுதான் அதை விடுத்து கிடைக்காத ஒன்றுக்காக ஆசைகாட்டித் தூண்டக் கூடாது. உசுப்பேத்திக் கதைக்கக் கூடாது. இது உண்மையிலேயே பாரிய பிரச்சினைகளை சமூகத்தில் உருவாக்கும். மீண்டும் தோற்றவர்களையும் குற்றவாளிகளையும் உருவாக்கிவிடும். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலக அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைகள் எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். பூகோள அரசியலை விளங்கிக்கொள்ளவேண்டும்.

குறிப்பு-

இவர் இவ்வாறு இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இவர் எவ்வாறு உள்வாங்கப்பட்டார் இவரது அடுத்த அரசியல் பயணம் எவ்வாறு அமையப்போகின்றது. இவரும் சுமந்திரனும் எவ்வாறு சிறிதரனை ஓரம்கட்ட முற்படுகின்றார்கள் போன்ற முக்கிய விடயங்களை அடுத்தவாரத்தில் விரிவாக பார்ப்போம்.

Tamil kingdom 
« PREV
NEXT »

No comments