Latest News

November 16, 2016

பிரபாகரன் வருவார்!! சுமணரத்ன தேரரிற்கு வந்த திகில் எச்சரிக்கை…
by admin - 0

 

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தவறாக நடந்து கொள்வதாகவும் அவர் ஆலயத்தின் தலைவராக நடந்து கொள்ளாமல் பயங்கரவாதியை போல் நடந்து கொள்வதாகவும் கடாபியை போல் நடந்து கொள்வதாகவும் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் பயங்கரவாதி அல்ல என கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் சுதந்திர போராட்ட போராளிகள். ஆனால், சுமணரத்ன தேரர் நீங்கள் பயங்கரவாதி. நீங்கள் மிகவும் கெட்டவர். நீங்கள் ஆலயத்தின் தலைவர் அல்ல.

சுமணரத்ன தேரர் எங்கள் தலைவர் வருவார் கொஞ்சம் பொறுங்கள். அதிகம் சத்தம் போட வேண்டாம். 2002 ஆம் ஆண்டு நீங்கள் தரவைக்கு சென்று ரமேஷ் ஐயா, தயா மோகன் ஐயா, ராம் ஐயா, கௌசல்யன் ஐயா என்று நீங்கள் கூறினீர்கள். 

அவர்களை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் தற்போது புலிகள் பயங்கரவாதிகளா?. சுமணரத்ன பேசாமல் வாயை மூடி கொண்டு இரு. எங்கள் தலைவர் இருக்கின்றார் சீக்கிரம் வருவார். கொஞ்சம் பொறுத்து இருங்கள் பார்ப்போம் என இந்த இளைஞர் கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments