குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு இத்தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்னரும் குருநாகல் மாவட்டத்தின் தெலியாகொன்ன பிரதேசத்தில் கண்டி வீதியில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்திருந்தன.
இந்நிலையில் நிகவெரட்டிய பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்தவுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் பேரில் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவகர்ஷா , அங்கு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கும், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதவிபரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments
Post a Comment