Latest News

October 21, 2016

பிரித்தானிய ரஷ்ய போர்ஏற்படும் பதற்றம்- சீண்டும் ரஷ்யா
by admin - 0

 

ஒரு நிமிடத்தில் பெரும் பதறம் ஏற்பட்டது. சிரியாவுக்கு போர் கப்பலை அனுப்புவதாக கூறி, ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் Scotland கடற்கரை ஓரமாக சென்றுள்ளது.  இதனை அவதானித்த பிரித்தானியா ஆட்டம் கண்டது. ரஷ்யாவின் நாசகார நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும், 2 பாரிய போர் கப்பல்களும், மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவத்து பிரித்தானியா நோக்கி நகர்ந்துள்ளது. இதனை ராடர் திரையில் அவதானித்த பிரித்தாணிய பாதுகாப்பு அமைச்சு, உடனடியாக பிரித்தானியாவின் அதி நவீன நாசகார போர் கப்பலையும் (HMS -டங்கன்) மேலும் 6 கப்பலையும் அவ்விடம் நோக்கி அனுப்பியது. இதுவரை எச்.எம்.எஸ் டங்கன் என்னும் அதி நவீன நாசகார கப்பலை பிரித்தானியா உலகிற்கு காட்டியதே இல்லை.

 


 

பிரித்தானியாவுக்கு உதவியாக நோர்வே நாட்டின் 2 போர் கப்பல்கள் ரஷ்ய கப்பலை நோக்கி நகர. மேலும் 2 போர் கப்பல்களை பிரித்தானியா பிரான்ஸ் பக்கமாக இருந்து நகர்த்தியது. 

 


இதனால் மொத்தம் 8 பிரித்தானிய போர் கப்பல்கள் ரஷ்யாவின் 6 போர் கப்பலை நோக்கிச் செல்ல. ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பலில் இருந்த அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உடனே கிளம்பி வானில் பறக்க. மேலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.  இது இவ்வாறு இருக்க நிலமையை உடனே அறிந்த ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டின் உடனடியாக ஆபிரிக்காவின் கருங்கடல் பக்கமாக தரித்து நின்ற தனது மேலதிக தாக்குதல் கப்பலை பிரித்தானியா நோக்கி நகர்த்தினார். இதனைக் கவனித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை. HMS “ரகன்” என்னும் அதி நவீன போர் கப்பலை அவ்விடம் நோக்கி அனுப்பி முன்னேறிய 2 ரஷ்ய கப்பலை தடுத்து நிறுத்த பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 

இதேவேளை விமானப்படையின் விமானங்கள் உடனடியாக வானிப் சிறிப்பறந்து பிரித்தானியாவின் கரையோரங்களை நோட்டமிட ஆரம்பித்தது. இரு நாட்டு ராஜதந்திரிகளும் உடனடியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு பேசினார்கள். ரஷ்யா… தாம் தாக்குதலுக்கு வரவில்லை என்றும். சிரியா நோக்கி தனது படைகளை நகர்த்தவே இவ்வாறு செவதாகவும் விளக்க முயன்றுள்ளது. இதேவேளை பிரித்தானியா  பாதுகாப்பு அமைச்சு தொடர்புகளை மேற்கொண்டு, ரஷ்யாவின் போர் கப்பலை சர்வதேச எல்லைக்குள் கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளது. பிரித்தானியாவின் கடல்படை தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும். தாங்களே பலம் பொருந்தியவர்கள் என்றும் ரஷ்ய அதிகாரிகள் தொலைபேசியூடாக வாக்குவாதத்தில் ஈடுபட. போர் ஒன்று மூழும் அபாயம் தோன்றியது.பிரித்தானியாவின் 8 போர் கப்பலையும் ஊடறுத்து இடையே தனது 2 போர் கப்பலை நிறுத்தி பிரித்தானியாவை மேலும் அதிர்ச்சியூட்ட,  விலாடுமிர் புட்டின் முனைந்துள்ளார்.  ஆனால் பிரித்தானியா படுவேகமான தனது வான் தாக்குதல் படையை தயார் நிலைக்கு கொண்டுவரவே.  ரஷ்ய கப்பல்கள் பின்வாங்கிச் சென்றுள்ளது.

 

 நடந்த இந்த நிகழ்வுகளால் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சாதாரண மக்களுக்கு இச்செய்தி எதுவும் தெரிய வாய்ப்பில்லை. தற்போது தான் ஊடகங்கள் இதனை வெளியிட்டுள்ளது. ஐ.நா சபை உட்பட அமெரிக்கா போன்ற பல நாடுகள் உடனடியாக ரஷ்யாவுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளதாகவும். பிரித்தானியாவை சீண்டும் வேலையை உடனே நிறுத்தவேண்டும் என்றும் பல உலக நாடுகள் ரஷ்யாவை கேட்டுக்கொண்டுள்ளது.

 


« PREV
NEXT »

No comments