Latest News

October 16, 2016

அப்பல்லோ வந்தார் ரஜினிகாந்த்
by admin - 0


சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை வந்தார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷும் உடன் வந்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து இருவரும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

 

கடந்த வியாழக்கிழமை மாலையில் ரஜினிகாந்த் அப்பல்லோ வருவதாக தகவல் பரவியது. ஆனால் அன்று அவர் வரவில்லை.  இந்நிலையில் பத்திரிகையாளர்கள் கொஞ்சமும் எதிர்பாராத நிலையில் இன்று மாலையில் தனது மகளுடன், தனது மகளின் கருப்பு நிற காரிலேயே அப்பல்லோ வந்து நலம் விசாரித்து விட்டு சென்றுவிட்டார்.


முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து ஏதும் தெரிவிக்காமல் சென்றிருந்தாலும்,  அறிக்கை மூலமாகவோ, டுவிட்டர் மூலமாக தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

« PREV
NEXT »

No comments