யாழ் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேதபரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார்.
இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளான் எனவும் உடலை எரிக்க வேண்டாம், புதைக்கும் படியும் விசாரணைகள் விரைந்து எடுக்கப்படும்” எனவும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சுலக்சன் , கயன் இருவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
மேலும், இந்த சம்பவம் இடம்பெற்றதிலிருந்து தற்போது வரை பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இருப்பினும் இந்த இளைஞர்களின் மரணத்திற்கு விபத்து காரணம் இல்லை என்றும், துப்பாக்கிக் காயம் பட்ட மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்ததால் கடும் பதற்றமடைந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் வீழ்ந்து காயமடைந்த மற்றைய மாணவனை பிடித்து தலையை மதிலுடன் மோதிக் கொலை செய்ததாக சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்..
No comments
Post a Comment