Latest News

October 07, 2016

தேசியத் தலைவர் உயிரோடிருப்பதை ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்சே!
by admin - 0

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார் முன்னால் சனாதிபதி மகிந்த ராஜபக்சே.


 

கேள்வி : இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டார், அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா?

மகிந்த : பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லை என்று கூறினார்.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் வெளிநாட்டுப் பயணத்திலிருந்த ‘மனித மிருகம்’ ராஜபக்சே அவசர அவசரமாக நாடுதிரும்பி அந்த தருணத்தை யாரும் அவ்வளவு இலகுவில் மறந்திருக்க முடியாது.

விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்கியதும் தரையில் மண்டியிட்டு வணங்கி எழுந்த அந்த நொடியில் வெளிப்படுத்திய வெற்றிப் பெருமிதம்(?) ஒட்டுமொத்த சிங்கள இனவெறியர்களையும் குதூகலப்படுத்தியிருந்தது.

அத்துடன் நின்றுவிடாது பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டதன் மூலம் நாட்டில் நீடித்துவந்த பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டப்பட்டதாக அன்று கொக்கரித் ராஜபக்சே இன்று கூறியுள்ள இந்தப் பதிலின் மூலம் முன்னதை மறுதலித்துள்ளார்.

தேசியத் தலைவருடையதாக காட்டிய சடலத்தை காதும் காதும் வைத்ததுபோல் எரித்து சாம்பலாக்கியமை… இதுவரை மரணச்சான்றிதழ் வழங்காமை… 2009 மே 18 இற்குப் பின்னரும் ஆளெண்ணிக்கையிலும் படைபல ரீதியிலும் இனப்படுகொலை இராணுவத்தை பலப்படுத்தியமை… தமிழர் தாயகத்தில் இன்றும் ஒன்டரை லட்சம் இராணுவத்தை நிறுத்திவைத்திருக்கின்றமை… போன்ற புறக்காரணிகள் மறைமுகமாக உணர்த்திவந்த தமிழீழத் தேசியத் தலைமையின் இருப்பை முதல்முறையாக மகிந்த ராஜபக்சே போட்டுடைத்துள்ளார்.

பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தான் இருக்கவில்லை என்று கூறியதில் பெரும் உண்மை பொதிந்துள்ளது. அவசர அவசரமாக வெளிநாட்டுப் பயணத்தை இடைநிறுத்தி வந்ததே அரைகுறையாக பகிரப்பட்ட வெற்றிச் செய்தியின் பின்னணியிலேயே நிகழ்ந்திருக்கும் என்பதே அதன் உண்மையாகும்.

அப்படியானால் என்ன நடந்திருக்கும்…?

முதல் வாய்ப்பு : தமிழீழத் தேசியத் தலைமையே தனது இருப்பை இல்லாததாக காட்டிக்கொள்வதற்காக தன்னைப்போல் உருவ ஒற்றுமையுடன் காணப்பட்ட ‘டம்மி’ நபரின் உடலத்தை விட்டுச்சென்றிருக்கலாம்.

இரண்டாவது வாய்ப்பு : முன்னரே சந்தேகிக்கப்பட்டது போன்று தலைவரின் முக ஒற்றுமையுடன் இருந்த சிங்கள இராணுவ வீரரை சிங்கள இராணுவமே கொன்று நாடகமாடியிருக்கலாம்.

மூன்றாவது வய்ப்பு : ஏறக்குறைய தலைவரது உடலமைப்புடைய ஒருவரை கொன்று முகத்தை மர்பிங் செய்து காட்டியிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதை உணர்ந்ததாலேயே போலி சடலத்துடன் புகைப்படமெடுக்கும் மனநிலையில் அன்று மகிந்த ராஜபக்சே இருந்திருக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் பணி நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் எம் தலைவனின் வருகைத்தருணமே உலகின் முன் உண்மையை உரைக்கும். அதற்கு முன்னோட்டமாக மகிந்த ராஜபக்சேவின் இந்த பதில் அமைந்துள்ளது.

கொலைவெறியனின் பதில் வார்த்தைகளுக்குள் ஊடுருவிச்சென்று ஆராய்ச்சி செய்து தேசியத் தலைமையின் இருப்பை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லையென்ற போதிலும் கொன்றதாக கொக்கரித்தவனின் வார்த்தைகளில் சொன்னால்தானே எம்மவர்களின் அறியாமையைப் போக்கமுடியும்.

தேசியத் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற மிதப்போடு மயக்கத்தில் ஆழ்ந்துவிடாது முன்னிலும் வீரியமான விடுதலைப் பணியாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

தேசியத் தலைவரின் வருகைக்கான பாதையை செப்பனிட வேண்டுமாயின், ஒரே இலட்சியத்தின் கீழ் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக உலகத்தமிழர்கள் ஓரணியில் திரண்டு நிற்பது ஒன்றே உடனடித் தேவையாகும்.

(கீழே, கடந்த ஆண்டில் முகநூல் பதிவில் பகிரப்பட்ட ஒரு பதிவு)

காத்திருப்புகள் காற்றின் திசைமாற்றும்!

ஆறு ஆண்டுகளாகிவிட்டது
ஆறாத காயங்கள் ஏற்பட்டு.
அமைதியாய் இருக்கிறோமே தவிர
நாம் அடங்கிப் போகமாட்டோம்.

விடுதலைக் கனவு சுமந்து
விதைகுழிக்குள் உறங்கும் நாள்
தெரிந்தபோதிலும்
வரிப்புலிகளின் நகம்கூடப் பட்டதில்லை
சிங்களச் சகோதரர்கள் மீது.

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
இவற்றின் புது மொழி
விடுதலைப் புலிகள்.

அவர்களுக்கு உலகம்(?) சூட்டிய
நாமம் பயங்கரவாதிகள்!
ஆயுதங்கள் மௌனித்து
ஆண்டுகள் ஆறு கடந்துவிட்டது.
இருந்தும்
கந்தக நெடியை இந்த நொடிவரை
நாசித்துவாரத்தினருகே உணர்ந்தாலும்
திருந்தவில்லை அவர்கள்.

இருந்தும் காத்திருக்கின்றோம்
அறத்தின் மீது நம்பிக்கை கொண்டு.

முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்பட்ட
ஒன்றரை லட்சம் உறவுகளின்
தியாகம் வெல்லும் என்ற
நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்.

அறம்
தியாகம்
வீண் போகாது.
வீண்போயின்
உலக இயக்கம்
பொய்க்கும்.

அடிபணிவோ
சரணாகதியோ
எம் இனத்தின் குணமன்று!
அடங்கிப்போதல்
எம் இனத்தின் பண்பன்று!

கண்ணீர் சிந்தி
கலங்கி நிற்பினும்
கால்பிடிக்கும் பரம்பரையன்று!

காத்திருப்புகள்
கால்பிடிப்பதற்கன்று,
கட்டளைக்கே!

உலகம் கைவிடின்..
அறம் தோற்பின்..
தியாகம் வீண்போயின்..
முடிவுகள் எமக்கானதாகும்
விளைவுகள் விண்னதிரும்.

காடுகள் விழிக்கும்!
வரப்புகள் தடதடக்கும்!
கருவிகள் தோளேறும்!
அப்போது காத்திருப்புகள்
காற்றின் திசைமாற்றும்!
————————-

ஈழம் மலரும்
அதை காலம் சொல்லும்!

ஈழத்து கோடாங்கி.

« PREV
NEXT »

No comments