அமெரிக்காவில் தாயின் கற்பப்பை பையில் இருந்து இருமுறை பிறந்த குழந்தை சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த பெண் மார்கரேட் போமர். இவர் கருவுற்று 16 வாரங்கள் ஆன போது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த அமெரிக்க மருத்துவர்கள் அவரின் கருவில் இருக்கும் குழந்தைக்கு கட்டி ஒன்று இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த கட்டி குழந்தையின் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயின் ரத்த ஓட்டத்தை தடுப்பதாக கண்டறிந்தனர். அதனை உடனே வெளியேற்றா விட்டால் குழந்தை 23வது வாரம் ஆகும் போது அதன் இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடும் என்றும் கண்டறிந்தனர்.
இதனால் மருத்துவர்கள் மார்கரேட் கரு வளர்ந்து ஆறு மாதம் ஆகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையின் முதுகில் இருந்த அபாய கட்டியை நீக்கினர், பின்னர் மறுபடியும் அந்த குழந்தையை தாயின் கருவில் வைத்து மருத்துவர்கள் மூடினார்கள்.
பிறகு 12 வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்த மார்கரேட் பிறகு அந்த பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தார். தற்போது குழந்தை நலமாகவுள்ளது. இச்சம்பவம் அமெரிக்கா மட்டுமல்லாது தற்போது சமூக வலைதளத்திலும் வைரலாகப் பரவி வருகின்றது. பலரும் இருமுறை பிறந்த அந்த அதிசயக் குழந்தையை வாழ்த்தி வருகின்றனர்.
No comments
Post a Comment