Latest News

October 27, 2016

கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் மாணிக்கதாசன்.!! ஈழத்து துரோணர்!!!
by admin - 0

கூரையில் பொருத்திய கிளைமோரினால்

உடல்  சிதறிய புளொட் மாணிக்கதாசன்.!!

ஈழத்து துரோணர்!!!  
 

நான் இந்த பதிவை எழுதுவதற்கு முக்கிய காரணி, இளைய தலைமுறையினருக்கு பிழையான போராட்ட வரலாறுகள் போய்ச்சேர்கின்றன என்பதே ஆகும்.! 

எமது தாயக பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாடு, மலேசியா உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் எமது இளைய தலைமுறையினர், புலிகளின் வீரம் செறிந்த போராட்டதையும், அவர்களின் தியாகத்தை மட்டுமல்லாது, எமது தேசத்திற்கும், போராட்த்திற்கும் எதிராக செய்யப்பட்ட துரோகங்களையும், துரோகிகளையும் நீங்கள் அறிய வேண்டும். 

ஆரம்பத்தில் போராடவென்று புறப்பட்ட இயக்கங்கள் பாதைமாறி துரோகிகளான பின்னர், இராணுவத்துடன் இணைந்து, காட்டிக்கொடுப்புகள்,சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் என பெரும் அட்டூலியன்களை நிகழ்த்தினார். 

இவர்களில் பலர் புலிகளால் கொல்லப்பட்டனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். தப்பி சென்றவர்கள் 2009 வரை தங்களை உருமறைத்து பதுங்கியே வாழ்ந்து வந்தனர். 

ஆனால் இப்போது "புத்தில் இருந்து வெளிவந்த சர்ப்பங்கள்" முகநூலில் தங்களை ஒரு நடுநிலை நக்கிகள் போலவும், "வாழ்நாள் முழுவதும் போராடிக்களைத்த போராளிகள் போலவும்" பதிவுகளை முகநூலில் இட்டு, கனவான்களாக வெளிவர ஆரம்பித்துள்ளனர். 

எமது இளைய தலைமுறையினர் சரியான வரலாற்றை தேடிப் படியுங்கள்.! 

சரி, யார் இந்த மாணிக்கதாசன்?? 

ஆரம்பத்தில், உமாமகேஸ்வரன் புலிகளமைப்பில் இணைந்தபின், அவரால் உள்வாங்கப்பட்டவனே இந்த மாணிக்கதாசன். 

அதனால், உமாவின் விசுவாசியாகவே புலிகளமைப்பில் இருந்தான். 

1979களின் இறுதியில் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாக இயக்கத்தின் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றுக்கு முகம் கொடுக்க அஞ்சி, தனது விசுவாசிகள் சிலருடன் இணைந்து "புளொட்" என்ற அமைப்பை உருவாக்கினான். 

அந்த நேரத்தில் புலிகளமைப்பு, மிகப்பெரும் பிளவுடன் கூடிய பெரும் துரோகத்தை அப்போது சந்தித்தது. 

ஆன போதும் தலைவர் துவண்டு போகவில்லை. 

ஆனால், பிரிந்து தனி இயக்கம் ஆரம்பித்த புளொட் அமைப்பு, போராடவென புறப்பட்ட நோக்கத்தை கைவிட்டு, புலிகளை அழிப்பதிலேயே குறியாக இருந்தது. 

இதில் உண்மையான இதைய சுத்தியுடன் போராடப்போன தமிழ் இளைஞர்களும் பிழையாக வழிநடத்தப்பட்டனர். 
காலப்போக்கில் அவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிளவுபட்டு சிதறிப்போயினர். அப்போதெல்லாம் மாணிக்கதாசன் உமாவுடனேயே தங்கியிருந்தான். 

இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னமே புளொட் அமைப்பு சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்க ஆரம்பித்திருந்தது. 

1989இல் கொழும்பில் வைத்து உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டதும், இப்போதைய அதன் தலைவர் சித்தாத்தன் அதன் தலைவரானார். அதன் இராணுவப்பிரிவுக்கு மாணிக்கதாசன் பொறுப்பாகவும்,பின்னைய நாளில் அதன் உப தலைவராகும் இருந்தான். 

இப்படி இருக்கும் போது மன்னாரில் முசல்குத்தி என்ற இடத்தில பெரும் முகாம் ஒன்றை அமைத்து பல மக்கள், மற்றும் போராளிகளின் சாவுக்கு இவர்கள் காரணமாக இருந்தார்கள். 

அந்த நேரத்தில் மன்னாரில் இவர்களின் இம்சை எல்லை மீறிப் போயிருந்தது. 

அத்தோடு தங்களை இராணுவ மேதைகளாக கற்பனை செய்து, தனிமுகாம் அமைத்தே தங்கி இருந்தனர். அடிக்கடி சண்டைக்கு வரும்படி புலிகளுக்கு தூது விட்டபடியும்  இருந்தனர். 

அப்போது புலிகளின் கவனம் இந்திய இராணுவத்துடன் இருந்தமையால், இவர்களின் அடாவடிகளை புலிகள் கணக்கெடுக்காது விட்டிருந்தனர். 

இந்திய இராணுவம் நாடு திரும்ப ஆயத்தமானதும், புலிகளின் முதல் கவனம் இவர்கள் மேலேயே திரும்பியது. 
 
இந்த முகாமுக்கு புளொட் சங்கிலி என்பவன் தலைமை வகித்தான். 1889இறுதியில் லெப்.கேணல்.சுபன் அண்ணை தலைமையில், இந்த துரோகிகள் முகாம் மீது புலிகளால் வலிந்த தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப் பட்டது. 

இதில் சங்கிலி உட்பட பலர் கொல்லப்பட, மாணிக்கதாசன் புலிகளுடன் சண்டையிடாது, ஆயுதங்களை எறிந்துவிட்டு, தனது சகாக்களுடன் வவுனியாவிற்கு உயிர் தப்பி ஓடினான். 

இந்த தாக்குதலில் 50கலிபர் துப்பாக்கி உட்பட பெரும் தொகையான ஆயுதங்களும், ரவைகளும் அன்று புலிகளால் அள்ளி எடுக்கப்பட்டது.

தப்பி ஓடிய மாணிக்கதாசனுக்கு சிங்கள இராணுவத்தினர் அடைக்கலம் கொடுத்து, அங்கேயே தங்கவைக்கப்பட்டான். 

1990நடுப்பகுதியில் மீண்டும் ஈழப்போர் ஆரம்பித்ததும், சிங்கள உளவுத்துறையின் ஆசியுடன் வவுனியாவில் அந்தோனியார் தேவாலயத்துக்கு பின்னால் "லக்கி கவுஸ், மற்றும் மல்லிகை முகாம் " என்னும் பெயர்களில் சித்திரவதை முகாம்களமைத்து, தமிழர்  தேசத்துக்கு எதிரான தங்கள் அட்டூலியத்தை ஆரம்பித்திருந்தனர். 

டெலோ,EPRLF, போன்ற குழுக்கள் எதிரியுடனிருந்து, புலிகளுக்கு எதிராக செயல்பட்ட போதும், யாழில் டக்ளசின் EPDP, மற்றும் வவுனியாவில் புளொட் அமைப்பினரின் கொலைவெறியும், அந்த நேரத்தில் எல்லை கடந்திருந்தது. 

புலனாய்வு நடவடிக்கை நிமித்தம் கொழும்பு செல்லும் புலிகளையும், எமது மக்களையும், எதிரிக்கு காட்டிக்கொடுத்து, எமது புலனாய்வு நடவடிக்கைக்கு மாணிக்கதாசன் பெரும் தடையாக இருந்தான். 

இவர்களின் காட்டிக்கொடுப்பினால், சில புலனாய்வு நடவடிக்கைகளை கடலாலும், காடுகளின் ஊடான நடைப்பயணத்தின் மூலமே மேற்கொள்ள  வேண்டியிருந்தது. 

(இந்த துரோகங்கள் காரணமாகவே, தங்களையும் இணைக்கும்படி தூது விட்டபோதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள், இந்த இரு குழுவையும், தலைவர் இணைக்கவில்லை.) 

1990களின் நடுப்பகுதியில் வவுனியாவில் மாணிக்கதாசன் தலைமையிலான அணியினர் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள், கைதுகள், சித்திரவதைகள், காட்டிக்கொடுப்புகள், கட்டப் பஞ்சாயத்து என இவர்களின் அராஜகம் எல்லைமீறியிருந்தது. 

அந்த நேரத்தில் புலிகளின் உளவுத்துறையும் பட்டறிவுகள் ஊடாக தங்களை வளர்த்துக்கொண்டிருந்தனர். 

இதன் ஒரு கட்டமாகவே தான் பொட்டு அம்மான் அவர்கள், ஒவ்வொரு மாற்றுக்குழுவுக்கும் எதிராக, ஒவ்வொரு பொறுப்பாளரை நியமித்து, அவர்களுக்கு கீழே ஒரு அணியை உருவாக்கி, மாற்றுக்குழுக்களை கையாளச்  செய்தார். 

அதன்படி புளொட் அமைப்பையும் கண்காணிக்க அணி உருவாக்கப்பட்டதும், புலிகளின் முதல் இலக்கே அன்று மாணிக்கதாசன் தான். பல தடவைகள் அவன் இலக்கு வைக்கப்பட்ட போதும், ஏதோ ஒரு காரணத்தால் அது தவறிப்போனது. 

அந்த நேரத்தில் புலிகளின் உளவுத்துறையினரால், பல ஊடுருவல்கள் மேற்கொள்ளப்பட்டது. எமது போராளிகளே துரோகக் குழுக்களுடன் நற்பாகி, பின் அவர்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களுடனேயே கூட இருந்து செயல்பட்டனர். 

இது ஒருபக்கமிருக்க, மறுவளத்தால் மாற்று குழுவில் இருக்கும் போதே தங்களின் தவறை உணர்ந்து, மனம் வெதும்பி இருக்கும் அவர்களின் உறுப்பினர்களை  இனம் கண்டு, அவர்களையும் எமது போராட்டப் பக்கம் திருப்பி, அவர்களை இரட்டை முகவர்களாக உருவாக்கி இருந்தனர் புலிகளின் உளவுத்துறையினர். 

ஒரு கட்டத்தில் மாற்று  குழுக்களால், புலிகளுக்கு தெரியாமல் எதுவுமே செய்ய முடியாதென்ற நிலையே அன்று  இருந்தது. அந்தளவு தூரம் புலிகளின் உளவுத்துறையினர் இவர்களினுள் ஊடுருவியிருந்தனர்.!

அதன் பின் புலிகளின் இரட்டை முகவரால் உருவாக்கப்பட்ட மின் ஒழுக்கை பயன்படுத்தி, தந்திரமாக புலிகளின் தயாரிப்பான 10kg நிறை கொண்ட கிளைமோர் ஒன்று மாணிக்கதாசனின் லக்கி முகாமின் கூரையினுள் கற்சிதமாக பொருத்தப்பட்டது. 

புலிகளின் உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, தனது நடமாட்டத்தை குறைத்து, பெரும்பாலும் இராணுவத்தின் துணையுடனேயே மாணிக்கதாசன் உலா வந்தான்.

 வெளியில் தான் தனக்கு ஆபத்தென எண்ணி உயர் விழிப்புடன் திரிந்தான். 

ஆனால், புலிகள் அவனது தலையின் மேலேயே குண்டை பொருத்தியது பாவம் அவனுக்கு தெரியாது.!

02/09/1999 பெரும் ஓசையுடன் புலிகளின் கிளைமோர் வெடித்தது. 

அன்று வவுனியாவே அதிர்ந்தது.! பெரும் மக்கள் விரோதியும் அவன் கூட்டாளிகளும் உடல் சிதறிப்போயினர்.! 

அந்த துரோகியால் கொல்லப்பட்ட குடும்பத்தாரும், இவனால் சித்திரவதையை அனுபவித்தவர்களும், அவர்களுடன் எம் மக்களும் ஆனந்தப்பட்டிருப்பர் என்பதே நிதர்சனமாகும்.!

புலிகளின் உளவு நடவடிக்கையால், துரோகிகள் மட்டுமல்ல, எதிரியின் உளவுத்துறையினரும் ஆட்டம் கண்டிருந்தனர் அன்று.! 
வரலாற்றுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments