தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் போன்றோரைக் கொலை செய்யும் திட்டத்தை அம்பலப்படுத்தியவரை சிறிலங்கா பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தியிருக்கும் சம்பவத்தை பிரித்தானியா வந்திருந்த முதலமைச்சர் அங்குள்ள தமிழ்த் தொலைக்காட்சி பேட்டியில் விபரித்திருக்கின்றார்.
எழுக தமிழ் பேரணி பேரணி நடைபெற்று ஒரு சில தினங்களின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தென்மாகாணத்தின் பலப்பிட்டிய என்ற இடத்திலிருந்து ஒரு நபர் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு அவரையும், இரா சம்பந்தனையும் படுகொலை செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு சிலரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் முதலமைச்சரினால் உடனடியாகத் தெரியபடுத்தப்பட்டது.
பிரித்தானியா பயணமாவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் அதே நபர், அதே தொலைபேசி இலக்கத்தினூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தொடர்புகொண்டு இந்தப் படுகொலைத் திட்டத்தினை அம்பலப்படுத்தியமைக்காக தன்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாகவும் முறையிட்டிருக்கிறார்.
லண்டன் வந்துள்ள முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஐ.பி.சி தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இந்தப் படுகொலை முயற்சியின் விபரங்களை வெளியிட்டார்.
No comments
Post a Comment