தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐ.நா முன்பு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் பேரணி ஆரம்பம்
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
ஐ.நாவில் தற்போது 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.
இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

No comments
Post a Comment