Latest News

September 12, 2016

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித இடமாக மற்றப்பட வேண்டும்
by admin - 0

மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் இந்த நிலையில் அவை அனைத்தும் புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கூறியுள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாவீரர் துயிலம் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்து விட்டு சென்றோம் எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

முல்லைத்தீவில் வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏனைய இடங்களிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லைங்களாக இருந்த காணி கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கல்லறைகள் இடித்து தரைமட்டமாக்கி அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேற வேண்டும் எனவும், தாம் மாவீரர்களான தமது பிள்ளைகளை வழிபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இதேவேளை இறுதியாக இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறையூடான மக்கள் கருத்தறியும் செயலமர்வில் கூட மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
« PREV
NEXT »

No comments