Latest News

September 14, 2016

பிரான்ஸ் தாக்குதல், கூட்டமைப்பின் தலைமைகள் மீதான தமிழ் மக்களின் நிதியான கோபத்தின் வெளிப்படு,
by admin - 0

பிரான்ஸ் தாக்குதல், கூட்டமைப்பின் தலைமைகள் மீதான தமிழ் மக்களின் நிதியான கோபத்தின்  வெளிப்படு,

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழர் பண்பாட்டுப் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்ட புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சமகால அரசியல் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்ததுடன், அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தும் கூட்டமைப்பினர், 

கூட்டமைப்பின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டு, 

தனிப்பட்ட பதவிகளுக்காகவும், அரசியல் சுகபோகங்களுக்காகவுமே அரசாங்கத்துடன் இணந்து செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

புலம் பெயர்ந்த எமது மக்களின் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்காமல், 

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் உணர்வுகளை உதாசீனம் செய்யும்விதமாக பதிலளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே ஆத்திரமடைந்த இளைஞர்கள் 

மாவை சேனாதிராசா உள்ளிட்ட கூட்டமைப்பின் குழுவினர் மீது கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவருகின்றது.

இதற்கு முன்னரும் எமது மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாக்குதல் நடத்த முற்பட்டிருந்தனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளுக்கு செல்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப் பட்டுவருவதைத் தடுப்பதற்கும், தாக்குதலில் ஈடுபடுகின்றவர்களை எச்சரிக்கை செய்வதற்கும், 

எதிர்காலத்தில் தாம் தாக்கப்படுவோம் என்பதை முன் உணர்ந்தவர் போலவுமே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்ட போது கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அதாவது மலேசியாவில் இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குலில் இலங்கையர்கள் தொடர்புபட்டிருந்தால் அவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

சம்பந்தனின் அந்த கோரிக்கையானது அன்சார் மீதான தாக்குதலை மையப்படுத்தியதாக இருந்தாலும், வெளிநாடுகளில் கூட்டமைப்பு மீதான தாக்குதல்களில் ஈடுபடுகின்றவர்களில் இலங்கையர்களாக இருந்தால் அவர்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே எதிர்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் கூட்டமைப்பு மீது தாக்குதல் நடத்த எவரும் துணிந்துவர மாட்டார்கள் என்பதே கூட்டமைப்பினரின் எண்ணமாக இருக்கின்றது. 

ஆனாலும் சம்பந்தனின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமலே பிரான்சில் தமிழ் இளைஞர்கள் கொதித்தெழுந்திருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுய இலாப அரசியல் செயற்பாடுகளையும், 

தனிமனித பெருமைகளுக்கான நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் விமர்சிப்பதையும், அதற்கு எதிராக உந்தப்படுவதையும் வன்முறையாக வெளிப்படுத்துவதை ஏற்கமுடியாது.

அந்தவகையில் பிரான்சில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மீது இளைஞர்கள் தாக்கியதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புலிகளின் போராட்டத்தையும், தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளையும் தமது தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக துஸ்பிரயோகம் செய்வதை தடுத்து நிறுத்தவும், 

சரியான பாதையை தெரிவு செய்யவும், சரியானவர்களை தெரிவு செய்யவும் தேர்தல் எனும் ஜனநாயக களத்தையே தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எப்படி இருப்பினும் வன்முறையை கையில் எடுப்பது தமிழர்களின் எதிர்கால அரசியலுக்கு ஏற்றதல்ல
« PREV
NEXT »

No comments