Latest News

August 07, 2016

இலங்கை அரசியல் யாப்பு வெளியீடு!
by admin - 0

மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் லண்டன் ஈஸ்காம் ரினிற்றி கொமினிற்றி சென்ரரில் இடம்பெற்றது.
மாலை 03.00 மணிமுதல் ஈழத்து நூற் சந்தையும், அதனைத் தொடர்ந்து இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாசன் தலைமை ஏற்று நடாத்தியுள்ளார்.
அகவணக்கத்தினை தொடர்ந்து மங்கள விளக்கினை ஈழவிடுதலைப் போராட்டத்தின் தமிழ் மாணவர் அணித்தலைவர் பொன்.சத்தியசீலன் ஏற்றிவைத்துள்ளார்.
இதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாளர் என். செல்வராஜா மற்றும் வெளியீட்டுரையினை ஊடகவியலாளர் தி.திபாகரன் நிகழ்த்தியுள்ளனர்.
நூலின் பிரதிகளை பொ.சத்தியசீலன் ,என்.செல்வராஜா வழங்கியதுடன், பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், முன்னாள் பிபிசி அறிவிப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம், பத்மநாப ஐயர் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையினை தமிழீழ பொருளாதார ஆய்வாளர் பாலா மாஸ்ரர் நிகழ்த்தியுள்ளார்.
இதன் பின்னரான ஆய்வுரைகளை ஆய்வாளர் காதர், ஊடகவியலாளர் கோபிரட்ணம், ஊடகவியலாளர் கே.வி.நந்தன், மு.திருநாவுக்கரசு அவர்களின் மாணவர்களான .திரிவேணி சதீஸ் (அரசியல் விஞ்ஞானத்துறை), சேனாதி முத்தைய்யா (பொருளியல்துறை) தமிழ்த்தோழமை இயக்கத்தை சார்ந்த செல்வி.பாரதி ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர்.
இறுதியாக நன்றியுரையின் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பில் ஊடகவியலாளர் அ.மயூரன் நிகழ்த்தினார். இவரு 09.30 மணியளவில் இந்நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நிறைவடைந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்துக்கது.
« PREV
NEXT »

No comments