Latest News

August 07, 2016

வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வமே எமது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை மழுங்­க­டிக்­கின்­றது
by Editor - 0

வடக்கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வமே எமது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை மழுங்­க­டிக்­கின்­றது. இத்­த­கைய அச்­ச­மான சூழலால்தான் எமது பிள்­ளை­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வரு­கின்றோம்.

எனவே வடக்­கி­லி­ருந்து இரா­ணுவத் தரப்­பினர் முழு­மை­யாக விரைவில் வெளி­யேற்­றப்­பட வேண்டும் என நல்­லி­ணக்க பொறி­மு­றை­க­ளுக்­கான மக்கள் கருத்­த றியும் செய­ல­ணியில் கலந்­து­கொண்ட பொது­மக்கள் கூட்­டாகக் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

நேற்­றைய தினம் யாழ்.மாவட்ட செய­ல­கத்தில் நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான மக்கள் கருத்­த­றியும்செய­ல­ணியின் ஐந்­தா­வது அமர்வு இடம்­பெற்­றி­ருந்­தது.

இச்­செ­ய­ல­ணியில் கலந்­து­கொண்ட மக்கள் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
தற்­போது அமைக்­கப்­பட்­டுள்ள நல்­லி­ணக்க செய­லணி போன்று கடந்த காலங்­க­ளிலும் பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு அவற்­றி­னூ­டாக மக்­க­ளது கருத்­துக்கள் பதிவு செய்­யப்­பட்டு செல்­லப்­பட்­டன. ஆனால் இவற்றால் எவ்­வா­றான பயன் ஏற்­பட்­ட­தென்­பது கேள்­விக்­கு­றி­யா­ன­தா­கவே உள்­ளது. குறிப்­பாக இவ் விட­யங்கள் உரிய இடத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­ட­னவா? அவ்­வாறு கொண்டு செல்­லப்­பட்­டவை பரீ­சி­லிக்­கப்­பட்­ட­னவா? அவற்­றிற்கு என்ன தீர்வு வழங்­கப்­பட்­டன? இவை அனைத்­துமே கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளன.

மேலும் முன்னாள் போரா­ளிகள் விட­யத்தில் அர­சாங்கம் முறை­யான ஓர் சமூக மய­மாக்­கலை ஏற்­ப­டுத்­த­வில்லை என்­ப­துடன் அவ்­வாறு ஏற்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­க­வு­மில்லை. ஏனெனில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்கள் மீது தொடர்ச்­சி­யான புல­னாய்­வா­ளர்­களின் கண்­கா­ணிப்பும் அவர்­களை மீள கைது செய்­வ­து­மாக அவர்­களை சமூ­க­மா­னது தம்­மோடு ஒரு­வ­ராக ஏற்­றுக்­கொள்ள அச்­சப்­பட வேண்­டிய நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது. குறிப்­பாக இத்­த­கைய செயற்­பாட்டால் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது பெண்­க­ளே­யாவர். இதனால் அவர்கள் சமூ­கத்­தினால் ஒதுக்­கப்­பட்டு தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள்.

மேலும் தற்­போது பெண்­க­ளுக்­கான பாது­காப்பு என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. விடு­த­லைப்­பு­லி­க­ளது காலத்தில் பெண்கள் சுதந்­தி­ர­மாக இருந்த போதும் தற்­போது அவ்­வா­றான ஓர் நிலைமை காணப்­ப­ட­வில்லை. மேலும் அர­சி­யலில் நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் பெண்கள் பிர­தி­நித்­துவம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்.

பெண்­க­ளுக்கு சந்­தர்ப்­பங்­களை வழங்­கா­மலே அவர்­களால் எது­வுமே செய்ய முடி­யாது எனக் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பெண்கள் எத­னையும் செய்­வ­தற்கும் பின்­னிற்­ப­தில்லை. ஆனால் அதற்­கான சந்­தர்ப்பம் இன்­னமும் வழங்­கப்­ப­ட­வில்லை. பொது­வாக அர­சியல் கட்­சிகள் கூட பெண்­க­ளிடம் சொத்­தி­ருக்­கின்­றதா என பார்த்தே அவர்­களை அர­சி­யலில் கள­மி­றக்க எத்­த­னிக்­கின்­றார்கள். இதனால் தான் தற்­போது அனைத்து பெண்­களும் இணைந்து தனி­யான ஓர் அர­சியல் பிர­வே­சத்­திற்­கான கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­ப­தற்கு எத்­த­னித்­தி­ருப்­ப­தாக அறி­கின்றோம். இது தொடர்பில் மூத்த அர­சியல் கட்­சிகள் சிந்­தித்து செயற்­பட வேண்­டிய தேவைப்­பா­டுள்­ளது.
கடந்த காலத்தில் நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட விகி­தா­சார ரீதி­யி­லான தரப்­ப­டுத்­தல்கள் குறிப்­பாக கல்­வியில் மேற்­கொள்­ளப்­பட்­ட­மை­யினால் பல தமிழ் இளை­ஞர்கள் நன்­றாக படித்­தி­ருந்தும் பல்­க­லை­க­ழகம் கிடைக்­கப்­பெ­றாமல் ஓரங்­கட்­டப்­பட்­டனர். இத்­த­கைய நிலை­மை­க­ளா­லேயே அவர்கள் ஆயு­த­மேந்தி போராட ஆரம்­பித்­தனர்.
அத்­துடன் அர­சி­ய­லிலும் இளை­ஞர்கள் உள்­வாங்­கப்­ப­டாது ஓரங்­கட்­டப்­பட்­டனர். குறிப்­பாக அர­சியல் எனும் போது வயோ­தி­பர்­களும் தீவி­ர­வா­திகள் எனும் போது இளை­ஞர்­களும் என்ற நிலை உலகம் முழு­வ­துமே ஏற்­பட்­டுள்­ளது. இதற்­கான காரணம் எங்­குமே இளை­ஞர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­மை­யே­யாகும். இந்­நிலை மாற்­றப்­பட்டு அர­சி­யலில் இளை­ஞர்கள் குறிப்­பிட்­ட­ளவு சத­வீதம் உள்­வாங்­கப்­பட வேண்டும். அதற்கு தற்­போது ஆட்­சியை தம்­மி­டையே தேக்கி வைத்­துள்ள வயோ­திப அர­சியல் வாதிகள் விட்­டு­கொ­டுப்பை செய்ய வேண்டும். இல்­லையேல் அதனை சட்­ட­மாக உரு­வாக்க வேண்டும்.

மேலும் வடக்கில் உள்ள இரா­ணுவம் வெளி­யேற்­றப்­ப­ட­வேண்டும்.ஏனெனில் இரா­ணு­வமே இங்­குள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் தான் எமது பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்க முடியாது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கின்றோம். எனவே இராணுவமானது உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.

அத்துடன் மொழி ரீதியான சமத்துவமும் மத ரீதியான சமத்துவமும் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்னொரு இனத்தை அழிப்பதற்காக அல்லது ஓர் இனத்தை ஒடுக்குவதற்காக வேறொரு இனத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சில நாடுகளும் அதனையே இங்கு செய்திருந்தன எனத் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments