Latest News

August 09, 2016

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் அரசின் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதா?
by admin - 0

நல்லாட்சி அரசாங்கத்தின் நாட்டிலுள்ள வெகுசன ஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் எனக்கூறி ஊடகவியலாளர்களை ஏமாற்றிய அரசின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. 

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகை கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித்திட்டம் என்று விளம்பரப்படுத்திய நல்லாட்சிக்கான அரசாங்கம் விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் கொழும்பிலுள்ள வெகுசன ஊடக அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நேர்முகப் பரீட்சை நடாத்தி தகுதியானவர்களைத் தெரிவு செய்த பின்னர் சலுகை அடிப்படையில் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் என மாற்றி பல்வேறுபட்ட இறுக்கமான நிபந்தனைகளுடன் மக்கள் வங்கியிடம் கடன் பெற்று மோட்டார் சைக்கிளைக் கொள்வனவு செய்யுமாறு ஊடகவியலாளர்களுக்குக் கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளமையானது ஊடகவியலாளர்களை நல்லாட்சிக்கான அரசாங்கம் ஏமாற்றியுள்ளதுடன் தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் அரசின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் என்ற அரசின் ஏமாற்றுத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பல ஊடகவியலாளர்கள் தற்போது வரை மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித திட்டம் எனக்கூறி 2015 ஆம் ஆண்டு விளம்பரப்படுத்தி நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்து நேர்முகப் பரீட்சை நடத்திய நல்லாட்சிக்கான அரசாங்கம் அதில் தெரிவு செய்யப்பட்ட தகுதியான ஊடகவியலாளர்களின் பெயர்களை 2016 ஆம் ஆண்டு அறிவித்த போது அத்திட்டத்தையே சலுகை அடிப்படையில் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் என மாற்றியுள்ளதுடன் ஊடகவியலாளர்களை மக்கள் வங்கியிடம் கடன் பெற்று மோட்டார் சைக்கிள் பெறுமாறும் அறிவித்துள்ளது.
ஆரசாங்கம் கூறியபடி தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மக்கள் வங்கி கடன்களை வழங்காது பல்வேறுபட்ட நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளமையால் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இன்றுவரை மோட்டார் சைக்கிளைப் பெறமுடியாத நிலையில் ஏமாற்றி அலக்களிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிளுக்கான கடன் விண்ணப்பத்தில் சட்டத்தரணி உட்பட்ட பலர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்த வேண்டியுள்ளதுடன் உறுதிப்படுத்தும் சட்டத்தரணிக்கு பெருமளவான பணத்தினை வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது. பல ஊடகவியலாளர்கள் மக்கள் வங்கியால் நாளை வா அடுத்த நாள் வா எனக்கூறி ஏமாற்றப்பட்டுள்ளமையும் இன்று வரை வங்கிகள் விண்ணப்பித்த பல ஊடகவியலாளர்களுக்கு பதில் ஏதும் கூறாமல் விட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

நாட்டிலுள்ள வெகுசன ஊடகவியலார்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் நல்லாட்சிக்கான அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளமையும் ஊடகவியலாளர்களை ஏமாற்றியுள்ளமையும் வெளிப்படுவதுடன் இத்திட்டத்தில் மோசடி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது.

« PREV
NEXT »

No comments