Latest News

August 04, 2016

எவிட போயி என்ட லேப்டாப்பு.. எரிந்து கொண்டிருந்த விமானத்தில் அரக்க பரக்க தேடிய கேரள பயணி..
by admin - 0

விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் தப்பியோடியபோது தனது லேப்டாப்பை கேரள பயணி ஒருவர் சாவகாசமாக தேடிய வீடியோ வைரலாகியுள்ளது. எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 எண் கொண்ட, போயிங் வகை விமானம் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர். துபாய் நேரப்படி நேற்று மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ரன்வேயில் மோதி தீப்பிடித்தது. 

விமானம் சிறிது தூரம் பைலட் கட்டுப்பாட்டை இழந்து படுவேகத்தில் ஓடியது. இருப்பினும், சில அடி தூரத்தில் சென்று விமானம் நின்றுவிட்டது. இதையடுத்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதன்பிறகு இன்ஜின் வெடித்து பெரும் நெருப்பு வெளிப்பட்டது. புகை மண்டலமாக அந்த இடம் காட்சியளித்தது. பயணிகள் அனைவரும் அவசர வழிகள் வழியாக துரிதமாக வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த ஒரு நிமிடத்தில் இன்ஜின் வெடித்துள்ளது. எனவே சற்று தாமதம் ஆகியிருந்தாலும், நெருப்பு அல்லது புகை மூட்டத்தால் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது. 


அந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த துபாய் தொழிலதிபர், ஷாஜி கொச்சிகுட்டி ஷூவை கூட மாட்டாமல் வெறுங்காலில் தலை தெறிக்க தப்பியோடியதாக பேட்டியளித்தார். ஆனால், ஒரு பயணி, உயிர் போகும் ஆபத்து சூழ்ந்த நிலையிலும் கூட லேப்டாப்.. லேப்டாப்.. என அதை தேடிக்கொண்டிருந்துள்ளார். மலையாளத்தில் அவர் லேப்டாப்பை எடுத்து தாருங்கள் என கேட்பதும், அதை எடுத்துக்கொள்வதும், அப்போது பதிவான ஒரு அமெச்சூர் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள், எமெர்ஜென்சி எக்சிட் வழி வாயிலாக தப்பியோடுங்கள் என கூச்சலிடும் சத்தமும் வீடியோவில் கேட்கிறது. இதன்பிறகு விமானத்தில் இருந்து தப்பி குதிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது.


« PREV
NEXT »

No comments