Latest News

August 03, 2016

யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் முன்னாள் அதிபர்கள் வணபிதா சி.ஏ.சிமித் , ஏ.ஈ.தம்பர் ஆகியோரது திருவுருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
by admin - 0

யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரிக்கு சேவையாற்றியமைக்காக முன்னாள் அதிபர்கள் வணபிதா சி.ஏ.சிமித்  , ஏ.ஈ.தம்பர் ஆகியோரது திருவுருவச்சிலைகள்  கல்லூரியின் றொமைன்குக் மண்டபத்தில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த பழைய மாணவன் ஆர்.சாந்தகுணநாதன்  திருவுருவச்சிலையினை திரைநீக்கம் செய்து வைத்தார். இச் சிலை அமைப்பதற்குரிய நிதியுதவியினையும் அவரே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது

அதிபர் சிமித் அவர்கள் 1945 -1955 வரை அதிபராக இருந்தவர் இவர் கல்லூரியின் விளையாட்டு கல்வித்துறையில் வளர்ச்சிப்போக்கினை ஏற்படுத்தியவர்.
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி

அதிபர் ஏ.ஈ.தம்பர் கல்லூரியில் மாணவராக கற்று ஆசிரியராக பணியாற்றி 1962-1964 வரை அதிபராக இருந்தவர்.  இவரது காலத்தில் கல்லூரி கல்வி விளையாட்டுத்துறை இரண்டிலும் வளர்ச்சி நிலையினை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்கிழ்வில் பழையமாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
« PREV
NEXT »

No comments