Latest News

August 12, 2016

உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்­டி­யது கட்­டாயம்-சுமந்திரன் எம்.பி
by admin - 0

நாட்டில் உண்­மை­யா­னதும் உறு­தியானதுமான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உண்­மைகள் கண்ட­றி­யப்­பட வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மான விட­ய­மாகும். அதற்­கான முதல் அடித்­த­ளத்தை அர­சாங் கம் இன்று ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்­திரன் நேற்று சபையில் தெரி­வித்தார். காணாமல் போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம் அமைக்கும் சட்ட மூல­மா­னது
நல்­லி­ணக்­கத்­திற்­கான ஆரம்பம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற காணாமற் போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம் (தாபித்­தலும் நிர்­வ­கித்­தலும் பணி­களை நிறை­வேற்­று­தலும்) சட்ட மூலம் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே சுமந்­திரன் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;
நல்­லி­ணக்­கத்­திற்­கான நட­வ­டி­கை­களில் இன்று முதல் அடித்­தளம் இடப்­பட்­டுள்­ளது. எனவே இது தொடர்பில் அர­சாங்­கத்தைப் பாராட்­டு­கின்றோம். எந்­த­வொரு நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­யையும் உண்­மையின் அடிப்­ப­டை­யி­லா­ன­தா­கவே அமைய வேண்டும். உண்மை கண்­ட­றி­யப்­ப­டா­விட்டால் இந்த நட­வ­டிக்­கைகள் வெற்­றி­பெ­றாது.

கடந்த பல வரு­டங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் போயுள்­ளனர். வெள்ளை வேன்­களில் கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்­ளனர். அரசின் மீது அதி­ருப்தி கொண்­ட­வர்கள் விமர்­சித்­த­வர்­க­ளுக்கும் கடந்த காலத்தில் இதே நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

எது எவ்­வா­றி­ருப்­பினும் நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தை அடுத்து உண்மை மற்றும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மட்­டுமே இப்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.வேறு எந்­த­வொரு விட­யத்­திற்­கு­மான நட­வ­டிக்­கைகள் இங்கு இடம்­பெ­ற­வி­லலை.

1980 களின் இறு­தியில் நாட்டில் இடம்­பெற்ற காணாமல் போதல்கள் தொடர்­பிலும் நீதிக்கு புறம்­பான படு­கொ­லைகள் பற்­றியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. யும் அப்­போது ஜெனீவா சென்று பல­வந்­த­மான அல்­லது தன்­னிச்­சை­யான காணாமல் போதல்கள் தொடர்­பாக ஐ.நா. செயற்­குழு அமர்வில் குரல் கொடுத்­தி­ருந்­தனர்.
மஹிந்த ராஜபக் ஷ தான் இவ்­வி­ட­யத்தில் முன்­னு­தா­ர­ண­மாக செயற்­பட்­டி­ருந்தார். அது மட்­டு­மல்­லாது இவ்­வி­டயம் தொடர்­பாக எடுத்­துச்­சென்ற ஆவ­ணங்­களை பொலி­ஸா­ருக்கு வெளிப்­ப­டுத்­தவும் வாக்கு மூல­ம­ளிக்­கவும் அவர் அப்­போது மறுத்­தி­ருந்தார்.

தெற்கில் இளை­ஞர்கள் காணாமல் போன­போதே இவர்கள் சர்­வ­தே­சத்­திடம் சென்­றி­ருந்­தனர். வாசு­தே­வவும் சிங்­கள இளை­ஞர்கள் காணாமல் போன­போதே ஜெனீவா சென்று குரல் எழுப்­பி­யி­ருந்தார்.

சிங்­கள இளை­ஞர்கள் காணாமல் போனால் மட்­டும்தான் அவ­ருக்கு மனித உரிமை மீறலா? தமிழ் இளை­ஞர்கள் காணாமல் போனமை பற்றி அவ­ருக்கு கவ­லை­யில்­லையா?

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் மட்­டு­மல்­லாது மஹிந்த ராஜபக் ஷ நிய­மித்த கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு அறிக்­கை­யிலும் சரி பர­ண­கம ஆணைக்­குழு அறிக்­கை­யிலும் சரி பல­வந்­த­மான காணாமல் போன­வர்கள் பற்றி விசா­ரிக்க வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது.

ஆயி­ரக்­க­ணக்­கானோர் கடந்த காலத்தில் காணாமல் போயுள்ளனர். அவர்களில் தங்கியிருந்தவர்கள் இன்றும் அவர்களது வரவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே உண்மையான சாத்தியமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகும். எனவே எதுவித தாமதமும் இன்றி இந்த சட்ட மூலத்தை சட்டமாக்க வேண்டும் என்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.


« PREV
NEXT »

No comments