Latest News

July 25, 2016

சந்தான கோபலகிருஷ்ணன் சுவாதியின் தந்தை அல்ல !! சுவாதி கொலை விலகாத மர்மங்கள் ! விரைவில் விடை கிடைக்குமா?
by admin - 0

“என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்களே”ன்னு, சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள், சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபாலகிருஷ்ணன் தான் சுவாதியின் அப்பா என்பதை இந்த உலகம் நம்பியது. ஆனால் அதேநாளில் ‘சுவாதியின் சொந்த அப்பா அவரில்லை’ என்பது காவல்துறையினருக்கு தெரிந்தே இருந்தது.

ராம்குமாரை சிறையில் அடையாளம் காட்ட சென்றபோதும் அதே அப்பா, “எம் பொண்ண ஏன் கொன்னே”ன்னு கதறியபோதும் ‘சுவாதியின் அப்பா இவரில்லை’ என்று சொல்ல காவல்துறையினருக்கு வாய் வரவில்லை.

“பொண்ணு பொணமா கிடக்கிறா. இந்தாளு ஏன் பாக்கெட்டுல கையவிட்டுக்கிட்டு நிக்கின்றார் ? அவளுடைய சித்தப்பாவோ வளைஞ்சு குனிஞ்சி செல்போன்ல போட்டோ எடுத்து யாருக்கோ அனுப்புகின்றார் ?” என்று சில விமர்சனங்கள் பொதுத்தளத்தில் வந்தபோதும் அந்த வார்த்தைகளில்  அதிருப்தி இருந்தது.

ஆனால்,  தீவிர முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் சுவாதியின் பின்னணிகள், நாம் நம்பிக்கொண்டிருக்கும் தகவல்களை நொறுக்கிவிடுகிறது. ‘இதுதான்டா உண்மை’ என்று நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத உண்மைகளை வீசியெறியும்போது, ‘சுவாதியின் அப்பா’ என அடையாளப்படுத்தப்பட்டவர், சம்பவம் நடைபெற்ற  அன்று அவருடைய உடல்மொழிகளால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டாரோ அந்த கூலான காட்சிக்குப் பின்னே என்ன பின்னணி இருந்திருக்கக் கூடும் என்று மீண்டும் சிந்திக்க வைத்துவிடுகிறது.

உண்மையில்,  சுவாதி தன்னை தந்தை என்று அடையாளப்படுத்திக்கொண்ட சந்தான கோபாலகிருஸ்ணனின் மகள் இல்லைஎன்ற தகவல் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தான கோபலகிருஷ்ணனின் முதல் மனைவியின் தங்கை ரங்கநாயகி என்பவர் தான் சுவாதியின் அம்மா. சுவாதி  பின்னர்  ரங்கநாயகிக்கும்  அவரது  கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  பிரிந்து  வாழ்ந்துள்ளனர். அதன் பின்னர் சுவாதி பெரியப்பாவான சந்தான கோபால கிருஷ்ணன் குடும்பத்துடனேயே வளர்ந்துள்ளார்.

பெங்களூரில் சுவாதி முஸ்லிம் இளைஞன் ஒருவரை பதிவு திருமணம் செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் குற்றவாளியாக  அடையாளம் காணப்பட்டுள்ள ராம்குமாரின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இந்த  பதிவு திருமண விடயம் வீட்டுக்கு தெரியவந்த  நிலையில் அதனை  மறைத்து சுவாதிக்கு  திருமண ஏற்பாடுகளை சந்தான கோபாலகிருஷ்ணன் மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது. இந்த முஸ்லிம் பதிவு திருமணத்தின் பின்னணியிலேயே ,  “பிலால் சித்திக்” என்ற பெயர் சுவாதி கொலை செய்யப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மறைத்திருக்க வேண்டிய விடயம், கொலை நடந்த உடனேயே வெளியே பகிரப்பட்டதால் இன்றளவும் இந்த கொலையில் சந்தேகம் வலுவானதாக மக்கள் பார்வைக்கு தெரிகின்றது. இது குறித்து காவல்துறையினருக்கு தெரிகின்ற போதிலும் மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போலவும் தெரிகின்றது.

ராம்குமார் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்று காவல்துறை சொல்வது ஏற்றுக்கொண்டாலும், ‘ஒருதலைகாதலால் தான் கொலை செய்தார்’ என்பதை ஏற்றுக்கொள்ள எது வித சந்தர்ப்பங்களும் இல்லை. சுவாதியை பதிவு திருமணம் செய்து கொண்டவர் என்று சொல்லப்படுகின்றவரிடம் கூட சுவாதி ராம்குமார் தன்னை காதலிக்க கேட்கின்றார் என்று ஒரு போதும் சொல்லவில்லை என்று தெரிய வருகின்றது. கறுப்பான உருவம் கொண்ட ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வருகின்றார் என்றே சுவாதி,  சந்தான கோபாலகிருஷ்ணனிடமும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக சந்தேகிப்பவரிடமும்  கூறியதாக தெரிகின்றது. எனவே  கொலைக்கான காரணம் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.

இந்த சுவாதியின் வழக்கு விசாரணை உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்குமோ இல்லையோ, அரசியல் அதிகார பலத்தால் யார் குற்றவாளி  என்று தெரிந்தும் அதை மூடிமறைத்துவிட்டு தொடர்ந்து ராம்குமார்தான் குற்றவாளி என நிருபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காவல்துறையினர் இருப்பதாக  தெரிகின்றது.

நீதிமன்றத்தில் உண்மை நிலவரம் வெளிப்படும் என்ற நம்பிக்கையுடன் ….தொடரும்
« PREV
NEXT »

No comments