Latest News

July 25, 2016

ஃப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
by admin - 0

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஃபோர்ட் மையர்ஸ் என்ற பகுதியில் இருந்த கேளிக்கையகத்தில், விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 16 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக, ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
« PREV
NEXT »

No comments