புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உயிரிழப்பதற்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் நீதியான முறையில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment