Latest News

June 20, 2016

புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை தொடர்கின்றது இந்தோனேசியா
by admin - 0


இலங்கைப் புக­லிடக்கோரிக்­கை­யா­ளர்­களை சர்­வ­தேச கடற்­ப­ரப்பில் கொண்டு சேர்க்கும் திட்­டத்தை இந்­தோ­னே­சியா தொடர்ந்தும் முன்­னெ­டுத்து வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 44 இலங்கைப் புக­லிடக்கோரிக்­கை­யா­ளர்கள் சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஒரு இரவு கடற்கரையில் கூடாரம் அமைத்து தங்­கு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

சீரற்ற கால­நிலை மாற்றம் ஏற்­பட்­டதன் பின்னர் படகுப் பய­ணிகள் சர்­வ­தேச கடற்­ப­ரப்­பிற்கு திருப்பி அனுப்பிவைக்­கப்­படவுள்­ளனர். இந்­தோ­னே­சிய அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்­கைக்கு சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தோ­னே­சிய அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது மிகவும் மோச­மா­னது என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை உள்­ளிட்ட அமைப்­புக்கள் குற்றம் சுமத்தி வரு­கின்­றன.

கர்ப்­பிணிப் பெண் ஒருவர், பெண்கள் சிறு­வர்கள் உள்­ளிட்ட நாற்­பத்திநான்கு பேர் இந்தப் படகில் பய­ணித்­துள்­ளனர். கடந்த சனிக்­கி­ழமை இந்த படகு இந்­தோ­னே­சி­யாவின் ஆச்சே மாகாண கடற்­ப­ரப்பில் இயந்­திரக்கோளாறு கார­ண­மாக தத்­த­ளித்­தது.

வெள்­ளிக்­கி­ழமை குறித்த படகுபய­ணி­களை சர்­வ­தேச கட­லுக்குத் திருப்பி அனுப்பி வைக்க இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் திட்­ட­மிட்­டி­ருந்­தனர் எனினும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக திட்டம் கைவி­டப்­பட்­டது.

கால­நிலை சீர­டைந்­ததும் மீளவும் படகுப்பய­ணிகள் திருப்பியனுப்பி வைக்­கப்­ப­டுவர் என மாகாண காவல்­துறைப் பொறுப்­ப­தி­காரி ஹுசைன் ஹமீடி தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச தரப்­புக்­களின் அழுத்­தங்­க­ளுக்கு அடிபணிந்தே இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் குறித்த புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை நாட்­டுக்குள் அனு­ம­தித்­தனர் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.
எனினும், உண்­மையில் சீரற்ற கால­நிலை கார­ண­மா­கவே இலங்கைப் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் நாட்­டுக்குள் தரை­யி­றங்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்..

புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சோ அல்லது பொறுப்பு வாய்ந்த தரப்புக்களோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்க ளையும் வெளியிடவில்லை.
« PREV
NEXT »

No comments