வீட்டார் விழித்தெழுந்தபோது தப்பியோடியுள்ளார். அந்த நபரைத் துரத்திச் சென்றபோது குறித்த சந்தேக நபர் தருமபுரம் சந்தைக்கு அருகிலுள்ள இராணுவ முகாமிற்குள் நுழைந்து கொண்டார்.
குறித்த பாலியல் வல்லுறவு முயற்சியை திருட்டு முயற்சியாகக் கூறி திசைதிருப்ப படைத்தரப்பு முயல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித் சந்தேக நபர் வீட்டினுள் நுழைந்தபோது கண்டுகொண்ட வீட்டார் அவரை விரட்டும்போது அவரது இடுப்பிலிருந்த துண்டு அவிழ்ந்து வீழ்ந்து விட்டதாகவும் உள்ளாடையுடனேயே அவர் தலைதெறிக்க ஓடி முகாமுக்குள் சென்றதையும் பொது மக்கள் கண்டுள்ளனர்.
ஆனால் கதையை மாற்றி குறித்த நபர் அப்பகுதியில் கோழி திருடச் சென்றதாகவும் அவர் திருடிய கோழியை முகாம் வாசலில் போட்டுவிட்டு ஓடி முகாமுக்கு நுழைந்து கொண்டதாகவும் கதைகூறி இச் சம்பவத்தை ஒர் திருட்டு முயற்சியாகக் காட்டி உண்மையை மூடி மறைக்க படைத்தரப்பு பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதாக மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
No comments
Post a Comment