Latest News

June 21, 2016

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் நாடகப் போட்டி
by admin - 0

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு  கல்லூரியின் நாடக மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் நாடகப் போட்டி ஒன்றினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நடாத்தவுள்ளது. இவ் சிறுவர் நாடப் போட்டிக்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை 16 - 20 ஆக இருத்தல் வேண்டும். , நடிகர்கள் ஆரம்பப் பிரிவின் இவ்வருடம் புலமைப்பரிவில் பரீட்சைக்கு தேர்றறவுள்ள மாணவர்கள் தவிர்ந்த தரம் 4 மற்றும் அதற்க்கு உட்பட்ட மாணவர்களாக இருந்தல் வேண்டும். ,  போட்டியில் பங்கு கொள்ளும் மாணவர்களுடைய பிறந்த திகதி முழுப்பெயர் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.,  நாடகத்தில் பங்கு கொள்ளும் பிற்ப்பாட்டுக்காரர்களின் எண்ணிக்கை 10 பேருக்கு மேற்படலாகாது இவர்கள் பாத்திரமேற்று நடிப்பவர்களுள் கணிக்கப்படமாட்டார்கள்.பக்கவாத்தியம் வாசிப்போர் அதே பாடசாலையைச் சேந்த  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்.

நாடகத்தின் கருப்பொருளானது ஜீவகாருண்யம் , அன்பு , நட்பு , கருணை , ஒற்றுமை பிறருக்கு உதவிசெய்தல்  , மூத்தோர் சொற்கேட்டல் முதலான விடயங்களைக் கொண்டு சுய ஆக்க பிரதியாக அமைதல் வேண்டும். ஆற்றுகைக்கான நேரம் 25 நிமிடங்கள். ஒரு நிமிடம் முன் பின் விலகலாக கருத்தில் கொள்ளப்படும். அதற்க்குக் குறைவாக அல்லது மேலதிகமாக ஆற்றுகை நேரம் அமையுமாயின் ஒவ்வொரு நிமிட நேரவிலகலுக்கும் 1 புள்ளி வீதம் குறைக்கப்படும்.

நாடக ஆற்றுகைக்கான மேடை ஒழுங்கமைப்பிற்க்கு 10 நிமிடங்கள் மாத்திரமே தரப்படும். மேலதிகமாக எடுக்கப்படும் நேரத்திற்த்திற்கு நிமிடத்திற்க்கு ஒரு புள்ளிகள் வீதம் ஒட்டு மொத்த ஆற்றுகைக்கான புள்ளியில் இருந்து கழிக்கப்படும்.மேடையில் உள்ள ஒளியுடனே ஆற்றுகை செய்யப்பட வேண்டும். பிரத்தியோக ஒளியமைப்புக்கள் யாவும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. நாடக எழுத்துருப்பிரதிகள் போட்டி நடைபெறும் போது நடுவர்களிடம் கையளிக்கப்படுதல் வேண்டும்.. அத்துடன் சுய ஆக்கம் என்பதனை பாடசாலை அதிபர் உறுதிப்படுத்த வேண்டும். 
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. போட்டிகள் தொடர்பாக முறைப்பாடுகள் மேற்கொள்ள வேண்டி ஏற்படின் நாடக பொறுப்பாசிரியர் ஊடாக எழுத்து மூலம் போட்டி முடிவு அறிவிக்கப்படுவதற்க்கு முன்னர் தரப்பட வேண்டும். போட்டி முடிவு அறிவிக்கப்பட்ட பின் முடிவுகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது.
நாடகப் போட்டிகள் எதிர்வரும் யூலை மாதம்  15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் இடம்பெறும். இந் நாடகப்போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ் நாடகப் போட்டி தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பபவர்கள் நாடகமன்றப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.குமரன் அவர்களுடன் 0779773538 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தகவல்களினை பெற்றுக் கொள்ள முடியும்  அத்துடன் போட்டியில் பங்குபற்றுகின்றவர்கள். யூலை மாதம் 12 ஆம் திகதிக்கு முன்பாக தமது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

200 வருட கல்வி மற்றும் கலைப்பாரம்பரியத்தினை கொண்ட யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் நாடக செயற்ப்பாட்டிற்க்கு தங்களின் மேலான ஒத்துழைப்பினை எதிர்பர்த்து நிற்க்கின்றோம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments