Latest News

June 11, 2016

சாலாவ இரா­ணுவ முகாமில் புலிகள் மீண்டும் வந்து 300 பேரை கொன்றனரா ?-ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விளக்கம்
by admin - 0

சாலாவ இரா­ணுவ முகாமில் ஏற்­பட்ட திடீர் தீ விபத்து சம்­ப­வத்தை அடுத்து இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பொது மக்­க­ளுக்கும் இடையில் முறு­கலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சிலர் முயற்­சி­களை மேற்­கொள்­வ­தாக ஸ்ரீலங்கா பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் குற்றம் சாட்­டினார்.

பொது மக்கள் தமது எதிர்­காலம் தொடர்­பாக அச்­சப்­பட வேண்­டிய தேவை­யில்லை எனத் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க எதிர்­வரும் 60 தினங்­க­ளுக்குள் இயல்பு நிலை ஏற்­ப­டுத்­தப்­படும் எனவும் நம்­பிக்கை வெளி­யிட்டார்.

குறித்த சம்­பவம் தொடர்­பாக பூர­ண­மான அறிக்­கை­யொன்று பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் பிர­தமர் உறு­திப்­படத் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டு பிரிவின் கீழ் விசேட கூற்­றொன்றை எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி. யின் தலை­வ­ரு­மான அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி. முன்­வைத்­த­போதே அதற்கு பதி­ல­ளிக்­கு­மு­க­மாக அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அனுர குமார குறிப்­பி­டு­கையில் அண்­மையில் கொஸ்­கம சாலாவ இரா­ணுவ முகாமில் ஏற்­பட்ட திடீர் தீ விபத்தால் ஏற்­பட்ட வெடிப்பின் கார­ண­மாக பாரி­ய­ள­வி­லான சேதங்கள் ஏற்­பட்­டுள்­ளன. பொது மக்­களும் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். பலரின் வீடுகள் முழு­மை­யா­கவும் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. பொது மக்­களின் பொட்கள் கள­வா­டப்­ப­டு­கின்­றன. இழப்­பீ­டுகள் தொடர்­பான மதிப்­பீ­டுகள் நடை­பெ­று­கின்­ற­னவா? பொது மக்­களின் அச்ச மன­நி­லையை போக்­கு­வ­தற்கும் இயல்பு நிலையை மேற்­கொள்­வ­தற்கும் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த ஸ்ரீலங்கா பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில்;

இந்த சம்­பவம் இடம்­பெற்­றது முதல் நானும் ஜனா­தி­ப­தியும் அது குறித்த விசேட நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்றோம். அப்­ப­கு­திக்கு உட­ன­டி­யாக நானும் அமைச்­சர்­க­ளான அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரேம்­ஜெ­யந்த, சாகல ரட்­நா­யக்க மற்றும் தினேஷ் குண­வர்­தன எம்.பி. ஆகியோர் விஜயம் செய்து பார்­வை­யிட்­ட­தோடு உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான பணிப்­பு­ரை­களும் விடுக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த சம்­பவம் தொடர்­பான விசா­ரணை அறிக்­கையும் கோரப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக சம்­பவம் இடம்­பெற்ற பகுதி யுத்த களம் போன்­றுதான் காணப்­ப­டு­கின்­றது. தொடர்ந்தும் வெடிக்­காத பொருட்கள் அங்­காங்­கே­யி­ருந்து வெடிப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. தொடர்ச்­சி­யாக வெடிப்புச் சம்­பவம் இடம்­பெற்ற பகு­தியை சுத்­தப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போது பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக பொது மக்­களை அனு­ம­திப்­பது தவிர்க்­கப்­பட்­டுள்­ளது.

பொது மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சம்­பவம் இடம்­பெற்­ற­வுடன் குறித்த பகு­திக்கு தேவை­யான அடிப்­படை வச­தி­களை உரிய அமைச்­சர்கள் ஊடாக பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அப்­பி­ர­தே­சத்தை மீள புன­ர­மைப்­ப­தற்­காக தேவை­யான நிதியை வழங்­கு­வ­தற்கு திறைசே­ரிக்கு உரிய பணிப்­பு­ரைகள் விடுக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது வரையில் 11 வீடு­களை மீளப்­பு­ன­ர­மைக்கும் செயற்­பாட்டை இரா­ணு­வத்­தினர் நிறைவு செய்­துள்­ளனர். அடுத்து 72 மணித்­தி­யா­லங்­க­ளினுள் சிறு சேத­ம­டைந்த வீடு­களின் திருத்தப் பணி­களை நிறைவு செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. எதிர்­வரும் 60 நாட்­க­ளுக்குள் அப்­ப­கு­தியில் சேத­ம­டைந்த வீடுகள் புன­ர­மைக்­கப்­பட்டு இயல்பு நிலை உரு­வாக்­கப்­படும். 125 கிண­றுகள் தற்­போது வரையில் சுத்தம் செய்­யப்­பட்­டுள்­ளன. அசுத்­த­ம­டைந்த குடிநீர் கிண­று­களை பயன்­ப­டுத்தும் வரையில் மாற்று நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் மூன்று காலாட்­படை பிரி­வினர் சுத்­தி­க­ரிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளனர். மேலும் இரா­ணு­வத்­தினர் தேவை­யேற்­படின் அதனை வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் குறித்த சம்­பவம் தொடர்­பில் விசா­ரணை அறிக்­கை­யொன்றும் கோரப்­பட்­டுள்­ளது. குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்­றதும் பாரா­ளு­மன்­றத்தில் அவ்­வ­றிக்கை சமர்ப்­பிக்­கப்­படும்.

அத்­தோடு வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்த அனை­வ­ருக்கும் மூன்று மாத காலத்­திற்கு தலா 50 ஆயிரம் ரூபா வழங்­கப்­ப­ட­வுள்­ளது. வர்த்­தக நிலை­யங்­களை மீள இயங்க வைப்­ப­தற்கும் புன­ர­மைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மின்­சாரம் உட்­பட அனைத்து விட­யங்­களும் எதிர்­வரும் சில நாட்­களில் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

வீடு­களை புன­ர­மைப்­ப­தற்கு தேவை­யான உத­வி­களை இரா­ணு­வத்­தினர் வழங்­கு­வற்கு தயா­ரா­க­வுள்­ளனர். குறித்த பகு­தியில் இயல்பு நிலை விரைவில் உரு­வாக்­கப்­படும். அதே­வேளை தற்­போது இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பொது மக்­க­ளுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். 1980 ஆம் ஆண்டு நான் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த போது ராவல்பிண்டியிலிருந்த இராணுவ முகாமில் திடீர் வெடிப்பு ஏற்பட்டு மூன்று நான்கு நாட்களாகஇடம்பெற்றது.

இது எதிர்பாராதவொரு சம்பவம். அது தொடர்பில் தவறான கருத்துக்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. புலிகள் மீண்டும் வந்து 300 பேரை கொன்றதாக கூட கூறுகின்றனர். அவைகள் அனைத்தும் பொய்ப்பிரசாரமாகும். இராணுவத்தினர் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துபவர்கள். அவர்கள் தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்பி முறுகல் நிலைமையை ஏற்படுத்த முயல வேண்டாம் எனக்கோருகின்றேன் என்றார் ஸ்ரீலங்கா பிரதமர் 
« PREV
NEXT »

No comments