திராவிட கட்சிகளுக்கு எதிரான அலை தமிழ்நாட்டில் அடிப்பாதல் அதிமுக , திமுக கட்சிகள் தோல்வியை நோக்கி செல்வதால் பெருமளவு பணப்பலத்தை காட்டி வாக்கை பெறமுயல்வதாக உறுதிப்படுத்தபட்டுள்ளது
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மற்றும் அதிமுக பிரமுகர் அன்புநாதன் ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடத்தி வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்திய வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரில் இத் தொகுதியில் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெற இருந்தது. இந்த நிலையில் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையம் திடீரென அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.
இங்கு மே 25-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அரவக்குறிச்சி தொகுதியில் அதிகளவு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமி, மணல் கொள்ளை மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தவர் என்பது புகார். அதேபோல் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியவர். இந்த இருவரும் இத்தொகுதியில் வெல்வதற்காக வாக்காளர்களுக்கு ரூ 1,000 முதல் ரூ10,000 வரை பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்கமாக ரூ.5 கோடி பிடிபட்டது. ஆனால் அன்புநாதன் வீட்டில் மட்டும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் பிடிபட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்
இதேபோல் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமியின் வீடு, லாட்ஜ் உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள கேசி பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. கேசி பழனிச்சாமி வீட்டில் மட்டும் மொத்தம் ரூ.2 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பல கோடி ரூபாயை இரு கட்சி வேட்பாளர்களும் பதுக்கி வைத்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக இந்த அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ரத்து செய்து மே 23-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் கொடுத்த புகாரின் பேரில் ஒரு சட்டசபை தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 233 தொகுதிகளுக்கு மட்டும் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
No comments
Post a Comment