Latest News

May 12, 2016

அதிமுக , திமுக ஆட்சி இந்தமுறை இல்லை-மத்திய உளவுத்துறை
by admin - 0

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக அல்லது திமுக கட்சியோ வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது என மத்திய உளவுத்துறை எடுத்த ரகசிய சார்வே சற்றுமுன் லீக் ஆனதாக தகவல் சமூக ஊடங்களில் வைரலாக பரவிவருகிறது. 
 
வைரலாக பரவிவரும் அந்த தகவலில் கூறப்படுவதாவது :-
 
ஒவ்வொரு தேர்தலுக்கும் 5 நாட்கள் முன்பு மத்திய உளவுத்துறையின் IB பிரிவு சட்டமன்ற தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஒரு ரகசிய சார்வே எடுக்கும். அப்படி எடுக்கப்பட்ட சர்வேவின் முடிவு சற்றுமுன் லீக் ஆனது.
 
இந்த சர்வேக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகிடந்த முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக-வுக்கு பெரிய இடியே விழுந்துள்ளது.ஏற்கனவே பல கோடிகள் செலவு செய்து தொலைகாட்சிகள் மூலம் தாங்கள் வெற்றி பெற செய்ய கருத்துகணிப்பு என்ற பெயரில் மக்களை திசை திருப்பிவிடலாம் என எண்ணியிருந்த நிலையில், இப்படி ஒரு அதிர்ச்சி வரும் என்று அவர்களே கணிக்கவில்லையாம்-இப்படி சொல்கிறார் அந்த கட்சிகளின் தலைமைக்கு நெருங்கிய சில நிர்வாகிகள்.
 
அப்படி என்ன தான் அந்த ரகசிய சார்வேவில் உள்ளது என்பதை நாமும் பார்ப்போம்.
 
கடந்த சில வாரங்களாக முக்கிய தொலைகாட்சிகள் மற்றும் ஊடகங்களில் வெளிவந்த கருத்துகணிப்புகளை மக்கள் நம்பவில்லையாம். மேலும், 70% மேற்பட்ட மக்கள் இந்த கருத்துகணிப்புகளுக்கு பின் அரசியல் கட்சிகளின் கைவரிசை இருப்பதை முழுமையாக உணர்ந்து இருக்கிறார்களாம். அதனால், அதிமுக திமுக கட்சிகள் மேல் ஒரு மிகப்பெரிய வெறுப்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாம்.
 
இந்த நிலையில், அதிமுக திமுக கட்சிகள் மேல் இருக்கும் வெறுப்பு காரணமாக இந்த முறை இவர்களுக்கு கண்டிப்பாக ஓட்டு போட கூடாது என்று 60% முடிவு செய்துள்ளதாக அந்த சர்வே சொல்கிறது.
சரி, அப்போ இந்த 60% பேர் யாருக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளார்கள் என்று நீங்கள் கேட்க வருவது புரிகிறது.
 
IB-யின் சர்வே படி பார்த்தால் இந்த 60% பேரில் குறைந்தது 40% முதல் 50% பேர் தாங்கள் திராவிட கட்சிகளுக்கு எதிராக  ஓட்டு போடபோவதாக சொல்கிறார்களாம். அதன்படி பார்க்கும் போது நாம் தமிழர் கட்சி  மற்றும் பா.ம.க  கட்சிகளுக்கள் இந்த முறை பெரிய அளவில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக IB சர்வே சொல்கிறது.இந்த கட்சிகள் தற்போதைய சூழலில் 140 தொகுதிகளில் முன்நிலையில் இருப்பதாகவும், இவர்களில் யார் பெருன்பான்மை பலம் பெறுவார்கள் என்பது தற்போதைய கேள்வி .
 திராவிட கட்சிகளின் தோல்வியடைய பா.ம.க , நாம் தமிழர் கட்சிகளில் பெருன்பான்மை பலம் அடையும் கட்சி ஆட்சியமைக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த செய்தியை பார்த்தவுடன் அதிமுக திமுக-வின் தலைமைகள் அதிர்ந்து போயிருந்தாலும், எப்படியாவது எவ்வளோ பணம் செலவு செய்தாவது வென்றிடலாம் என்று முயற்சி செய்கிறது என்று சமூக ஊடங்களில் வைரலாக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments