முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற காணி கொளவனவு தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.
முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாத்தறை காணி விவகாரம் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு தற்போது அழைத்துசெல்லப்படுகின்றார். தென் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகவே அவர், அழைத்துசெல்லப்படுகின்றார்.
No comments
Post a Comment