Latest News

May 30, 2016

தமிழீழ விடுதலைப்புலிகளை பாராட்டிய ஶ்ரீலங்கா பிரதமர்
by admin - 0

இலங்கை தற்போது போலியோ அற்ற நாடாக திகழ்கின்றதாகவும், போலியோ நோயை ஒழிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (29) இடம்பெற்ற ரொட்டறிக் கழகத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கை முழுவதும் போலியோ ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக தேசிய நோய் தடுப்பு தினமன்று, “நீங்கள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு தயாரானால் நாமும் ஆயுதங்களை கீழே வைத்து போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு தயார்” என தமிழீழ விடுதலைப் புலிகள் கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக கூறினார்.

கடுமையான ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்திலும் இலங்கையில் போலியோ நோயை ஒழித்துள்ளதாகவும், இதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பங்குள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன், ரொட்டறிக் கழகத்தின் பங்களிப்பு காரணமாகவே போலியோவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்ததாகவும், அதன் தலைவர் ரவீந்திரனிடமிருந்து மிக அதிகளவான அனுசரணைகள் கிடைக்கப்பெற்றதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

« PREV
NEXT »

No comments