Latest News

May 08, 2016

இலங்கை வெயிலுக்கு பயந்து குளிர்பானங்களை அருந்த வேண்டாம்! எச்சரிக்கை
by admin - 0

இலங்கைத் தீவில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலையின் காரணமாக குளிர்பானங்களையும், அதிக சீனி கலக்கப்பட்ட பானங்களையும் பருக வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பானங்களை பருகுவதன் ஊடாக, மீண்டும் உடலில் நீரற்ற நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீருக்கு பதிலாக, இளநீரை பருகலாம். ஆனால் குளிர்பானங்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற காபன் ஏற்றப்பட்ட பானங்களை பருகுவதால் பாதிப்புகளே ஏற்படும்.

அதிக வியர்வை ஏற்படுவதால் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நீர் அதிகளவில் பருகுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக சிறார்கள் நீர் அதிகமாக பருக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில், மணித்தியாலகத்துக்கு ஒரு முறையேனும் மாணவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். தகரங்களால் மறைத்து நிழல் ஏற்படுத்துவதை தவிர்த்து, தென்னை ஓலை உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால் நிழல் ஏற்படுத்தப்படுவதே சிறந்தது.

பாடசாலைகளில் மாணவர்கள் கழுத்துப் பட்டி அணிவதை தவிர்ப்பது உசிதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு நிறத்திலானதும், கடுமையான கனதியான கொண்டதுமான உடைகளை தவிர்த்து, இலகுவாக வியர்வை வெளியேறக் கூடிய வகையிலான மென்யான ஆடைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படடுள்ளது.

தோல் சம்மந்தமான நோய்களின் போதும், வலிப்பு, அதிக களைப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், வைத்தியரை நாடுமாறும் கோரப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments