Latest News

May 07, 2016

பிரான்ஸ் பொலிசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படும் தமிழர்கள்
by admin - 1

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு  திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது.

முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை பொலிசார் கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் ,

ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா)  இல்லாமல் கைது செய்யப்படும் நபரை எந்தவொரு விசாரணையும் இன்றி பொலிசாரே நேரடியாக ரகசியமான முறையில் நாடு கடத்தி விடுகின்றனர்,


வரை பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்ப பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு அனுப்பிய தகவலே இங்கு செய்தியாக பிரசுரிக்கப்படுகின்றது…..

வதிவிட உரிமை இன்றி வாழும் உங்கள் சொந்தங்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்துங்கள்.

« PREV
NEXT »

1 comment

kamalathasan said...

இது ஒரு வதந்தி செய்தி! குற்றம் செய்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வேலை விசா பலருக்கு வழங்கப்படும் இன்னும் பலருக்கு வழங்கப்படுகிறது
உண்மையான செய்தி மட்டுமே பகிர்வு தான் நல்லது