Latest News

May 16, 2016

தமிழீழத்தை கைவிட்டோம் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் இந்தியாவில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்
by admin - 0

தனித் தமி­ழீழ நிலைப்­பாட்டை விட்டு தாம் நகர்ந்­து­விட்ட­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

தனித் தமி­ழீ­ழமே தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்­பாட்டை வலி­யு­றுத்­திய வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தைவிட்டு வில­கி­விட்­ட­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நேற்­று­முன்­தினம் இந்­தி­யாவின் மத்­தி­ய­பி­ர­தேச மாநிலம் உஜ்­ஜைனில் நடை­பெற்ற கும்­ப­மேளா நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த
இரா.சம்­பந்தன்
இந்­திய பத்­தி­ரி­கை­யான த இந்­து­வுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி,ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் பங்­கேற்­றி­ருந்த கும்­ப­மேளா நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்தார்.

இந்த நிகழ்­வை­ய­டுத்து இந்­திய தலை­வர்­க­ளையும் சந்­தித்து சம்­பந்தன் எம்.பி. கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் உட்­பட பெரும்­பா­லான தமிழ் கட்­சிகள் பிரிக்­கப்­ப­டாத இலங்­கைக்குள் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற இணக்­கப்­பட்­டிற்கு வந்­துள்­ளன.

அத்­துடன், தற்­போது இலங்­கையில் புதிய அர­சியல் சாச­ன­மொன்றை தயா­ரிக்கும் பணிகள் இடம்­பெ­று­கின்­றது. இதன்­போது தமிழ் மக்­களின் தேசியப் பிரச்­ச­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை, தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 ஆவது வருட தினம் நேற்று முன்தினமாகும். அன்றைய தினமே இந்த செவ்வியினை சம்பந்தன் எம்.பி. வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments