இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவினால் மனித உரிமை பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு நேற்றுத் தொடக்கம் இன்று வரை யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் கோட்டலில் நடைபெற்றுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வில் இலங்கைச் சட்டங்கள், அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், அவை மீறப்படும் சந்தர்ப்பங்கள், பாதுகாப்புப் பெறுதல், ஊடகவியலாளர்களது சமூகப்பொறுப்புக்கள், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி பயனுள்ள கருத்துரைகள், சம்பவ ஆய்வுகள், கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றிருந்தன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான மேற்படி செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.அம்பிகா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்வி அதிகாரி எஸ்.கபிலன், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆலோசனை மையத்தின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான சுபாசினி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள்.
No comments
Post a Comment