கொரியாவின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படாத வரை அந்நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என அந்நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் தெரிவித்தார்.
அந்நாடு சர்வதேச உடன்படிக்கையொன்றிலிருந்து விலகிய பின்னர் தனது முதலாவது அணு ஆயுதப் பரிசோதனையை 2006 ஆம் ஆண்டில் மேற்கொண்டது.
தொடர்ந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்தப் போவதாக வட கொரியா திரும்பத் திரும்ப அச்சுறுத்தி வந்தது.
இந்நிலையில் வட கொரிய தொழிலாளர் கட்சியின் முக்கியத்துவம் மிக்க கூட்டத்தில் உரையாற்றிய கிம் யொங் – உன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளடங்கலான நாடுகளுடன் இயல்பான உறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரி விக்கிறது.
அத்துடன் அந்தக் கூட்டத்தில் கிம் யொங் – உன், நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் வகை யில் தென் கொரியாவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அவர், "பொறுப்புணர்வுடைய அணு ஆயுத வல்லமையுடைய நாடு என்ற வகையில் வட கொரியாவானது தனது இறைமை மீறப்படாத வரை அணு ஆயுதத்தை பயன்படுத்தாது" என தெரிவித்தாக அந்நாட்டு அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
வட கொரியா தனது அணுசக்தித் தளமொன்றில் பிறிதொரு அணுசக்திப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட் டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்நாட்டு ஆளும் கட்சியின் கூட்டம் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இந்தக் கூட்டமானது கிம் யொங் – உன்னை அந்நாட்டின் உச்ச நிலைத் தலைவராக உத்தியோக பூர்மாக அங்கீகரிப்பதாக உள்ளது.
No comments
Post a Comment