Latest News

May 25, 2016

தமிழகத்தில் மாறும் அரசியல் -காரணமாகும் நாம் தமிழர் கட்சி
by admin - 0

தமிழக அரசியலில் பிரதான கட்சிகளான திமுக.,வும், அதிமுக.,வும் எப்போதும் எதிரும் புதிருமான இருந்து வரும் நிலையே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பரஸ்பரம் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த காலம் போய், இப்போது பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்ளும் வழக்கும் வந்துள்ளது பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

தேசிய அரசியலில் ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளும் போது வணக்கம் சொல்வதும், நலம் விசாரித்துக் கொள்வதும் வழக்கமான நிகழ்வு. இது போன்ற அரசியல் நாகரிகம் தமிழகத்தில் வராதா என பலரும் கேட்டு வந்தனர். இந்த நிலை சட்டசபை தேர்தலுக்கு பிறகு மாறி வருகிறது. எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்கும் செயல்பாடு மாறி தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவிற்கு திமுக, பா.ஜ., என பாரபட்சமின்றி அழைப்பு அனுப்பப்பட்டது. காங்கிரசுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அரசியல் நாகரிகம் கருதி திமுக.,வும் அரசின் அழைப்பை ஏற்று, திமுக பொருளாளர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டார்.

மீண்டும் ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து சொன்னார். இதே போன்று எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவும் வாழ்த்து கூறினார். முதல் சட்டசபை கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க வந்த ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளாக சட்டசபைக்குள் வராமல் இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் சட்டசபைக்குள் வந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டார்.


இந்த மாற்றம் ஏன் வந்தது என்பது வெளிப்படையான ஒன்று அதாவது தமிழ் தேசிய வளர்ச்சி தமிழகத்தில் அபரிமிதமாக இருப்பது நடந்து முடிந்த தேர்தலில் வெளிச்சமாகியுள்ளது அதாவது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் கண்டு இந்திய அரசியல் ஆட்டம் கட்டுவிட்டது இதனால் தேர்தல் முடிவுகளை  இந்திய உளவு அமைப்பும் திராவிட கட்சிகளும் சேர்ந்து மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன இப்படியான வளர்ச்சியை விடக்கூடாது என்று முடிவெடுத்த இவர்கள் தங்கள் வேற்றுமைகளை களைந்து ஒன்றாக இணைந்து செயற்ப்பட முடிவு எடுத்துள்ளதாகவும் இதற்க்கு இந்திய உளவு அமைப்பு அடித்தளம் இட்டதாகவும் இரகசிய தகவல் கசிந்துள்ளது. இனிவரும் காலங்களில் தமிழ் நாட்டில் பல மாற்றங்களை காணலாம் இதற்கு  தமிழ் தேசிய கட்சியான நாம் தமிழர் கட்சியே முக்கிய பங்காற்றும் என்பது மறைக்கப்பட்ட மறுக்கமுடியாத உண்மை.

« PREV
NEXT »

No comments