Latest News

May 05, 2016

லண்டனில் படையெடுத்துள்ள மிக மிக ஆபத்தான மயிர்கொட்டிகள்
by admin - 0

லண்டன் மற்றும் இங்கிலாந்தில் மிக மிக ஆபத்தான மயிர்கொட்டிகள் பரவி வருகின்றன. நகரப்பகுதிகள் மற்றும் புறநகரங்ககளில் உள்ள ஒக் மரங்களில் மயிர்கொட்டிகள் கூடுகட்டி பரவிவருகின்றன.

மிக வேகமாக பரவிவரும் இந்த நச்சு மயிர்கொட்டிகளால் மிகக் கடுமையான தோல் தடிப்பு நோய்கள், கடுமையான வாந்தி, மற்றும் நீண்ட நாள் தொடரும் காய்ச்சல், ஆஸ்துமா, கண் மற்றும் தொண்டை எரிச்சல், தலைச்சுற்றல், என்பன ஏற்படும் என்று வன நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மற்றும் இங்கிலாந்து தென்கிழக்கு பகுதிகளில் காணப்படும் இந்த ஆபத்தான மயிர்கொட்டிகள் நாடு தழுவிய ரீதியில் பரவக்கூடும் என்ற பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய ஆபத்தான மயிர்கொட்டிகள் 2005 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை, இந்தியா மற்றும் வெப்பவலய நாடுகளில் பல்வேறு மரங்களிலும் பல்கிப் பெருகிக் காணப்படும் மயிர்கொட்டிகள் தற்போது உலக பருவ மாற்றம் காரணமாக மேலைத்தேய நாடுகளிலும் பரவி வாழ ஆரம்பித்துவிட்டன என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் பரவிவரும் மயிர்கொட்டிகளால் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் மயிர்கொட்டிகளின் கூட்டை எங்காவது கண்டால்உடனடியாக பூச்சி கட்டுப்படுத்தும் கவுன்சில் நிலையத்துக்கு (pest control) உடனடியாக அறிவிக்கவேண்டும் என்று பிரித்தானிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

« PREV
NEXT »

No comments