கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை கோண்டாவில் புகையிரத நிலையப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புகையிரதம் கோண்டாவில் பகுதியில் சென்று கொண்டிருந்தவேளை, தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் மீது புகையிரதம் மோதியுள்ளது.படுத்திருந்த இருவருக்கும் புகையிரதம் வந்த சத்தம் கேட்கவில்லையா ? இரண்டு பேரும் ஒன்றாக தற்கொலைக்கு செல்லும் சாத்தியமே குறைவு அத்துடன் அதிகாலை என்பதால் போதையில் இருப்பதற்கான சாத்தியம் குறைவு. இதனால் இது விபத்தா? அல்லது கொலையா? என தெரியவில்லை . இவர்கள் யார் என்பது தெரிந்ததால் சில தகவல்கள் வெளியாகலாம்
இந்த விபத்து? சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், இந்த சம்பவம் குறித்த கோப்பாய்ப் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
No comments
Post a Comment