முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான வைத்தியர் வரதராஜனுக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றவேளை அங்குள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்களுள் வைத்தியர் வரதராஜனும் ஒருவர்.
இறுதிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் மே மாதம் 15ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த வைத்தியர் வரதராஜன் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் விடுதலைப்புலிகள் மக்களைக் கொன்றார்கள் என பொய்ச்சாட்சி கூறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.
தற்போது விடுதலைப்புலிகள் தொடர்பில் தான்கூறிய கூற்றை மறுத்துவருவதுடன் சிறீலங்கா புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்தே தான் அவ்வாறு கூறியதாகவும் கூறிவருகின்றார்.
இந்நிலையில் சிறீலங்காவிலிருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் வரதராஜனுக்கு அமெரிக்க அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது.
No comments
Post a Comment