அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளராகவுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னால் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு முஸ்லிம்களுக்கு விதிக்கப்படவுள்ள தடைக்கு லண்டனின் புதிய மேயர் விதிவிலக்காக அமைவார் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பாரிஸ் நகரில் 130 பேர் பலியாவதற்கு காரணமான தாக்குதலையடுத்து அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை டொனால்ட் டிரம்ப் முன்வைத்திருந்தார்.'
இந்நிலையில் லண்டனின் மேயராக தெரிவாகியுள்ள சாதிக் கான், டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தனக்கு அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது சாத்தியமற்றதாக இருக்கும் என கவலையடைவதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், எப்போதும் விதிவிலக்குகள் உள்ளன என்று தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தொடர்பான டொனால்ட் டிரம்பின் கருத்து அமெரிக்காவிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் கண்டனத்தை தோற்றுவித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லண்டனின் மேயர் பதவியை கான் பெற்றுள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானிய குடியேற்றவாசிகளுக்குப் பிறந்த மகனான கான், லண்டனின் முதலாவது முஸ்லிம் மேயராக தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில் அவர் டைம்ஸ் சஞ்சிகை க்கு அளித்த பேட்டியில், தான் அமெரிக்கா சென்று அந்நாட்டு மேயர்களை சந்திக்க விரும்புவதாகவும் ஆனால் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக வந்தால் தனது பயணம் தனது மத நம்பிக்கைகளின் நிமித் தம் தடைப்படலாம் என குறிப்பிட்டிருந் தார்.
No comments
Post a Comment