Latest News

May 19, 2016

எதிர்வரும் 23ஆம் திகதி ஜெயலலிதாவின் பதவியேற்பு - கட்சிகள் இதுவரை பெற்ற வாக்கு சதவீதம்.
by admin - 0

சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அடுத்த 5 ஆண்டுகளுக்கான தனது முதல்வர் பதவியேற்பினை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 16ஆம் திகதி நடைபெற்றிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த நிலையில், அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதி தமிழகத்தின் முதல்வராக 6ஆவது தடவையாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வரை தொகுதிகள் அனைத்துக்குமான முதற்கட்ட வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 133 தொகுதிகளில் அ.தி.மு.க.வினர் வெற்றிபெற்றுள்ள அதேவேளை, 98 தொகுதிகளில் தி.மு.க.வும் 1 தொகுதியினை பா.ம.க.வும் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஆங்காங்கே சந்தோஷ ஆர்ப்பரிப்புக்களில் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி அடுத்த தவணைக்கான முதல்வர் பதவியேற்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறான போதும், தமிழக சட்டப்பேரவைக்கான தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு 23ஆம் திகதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில், குறித்த இரு தொகுதிகளினதும் வாக்கு வீதங்கள் ஆட்சிமாற்றத்திற்கு ஏதுவாக அமையாது என்பதனால் குறித்த இரு தொகுதிகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் முன்னரே ஜெயலலிதாவின் பதவியேற்பு இடம்பெற தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments