Latest News

April 07, 2016

நடுவீதியில் விடப்பட்ட மலையக உதவி ஆசிரியர்கள்; பெருநாளுக்கு ஆடை வாங்ககூட பணமின்றி அவதி
by admin - 0

மலையகத்தில் உதவி ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள், பொருளாதார ரீதியில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதற்குகூட அவர்களுக்கு எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.

மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாதான் வழங்கப்படுகின்றது. போக்குவரத்துக்கும், காலை உணவுக்குமே இது போதுமானதாக இருக்கிறது. புதுவருடம் வருகிறது. ஆடை வாங்ககூட பணம் இல்லை. கெளரவம் பார்த்து தொழிலுக்கு வந்தோம். ஆனால், கைவிடப்பட்டுள்ளோம். '' என்றார் மலையக உதவி ஆசிரியர் ஒருவர்.
எனினும், இவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியிருக்கின்றார். ஆனாலும், இதற்கு அமைச்சரவையோ அல்லது நாடாளுமன்றமோ இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. இதை செய்து முடிப்பதற்கு எப்படியும் ஆறுமாதங்களாகும் என்று மலையக புத்திஜீவி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஊவாமாகாணசபை ஆசிரியர்களுக்கு, மாகாணசபை ஊடாக சம்பள உயர்வு வழங்கப்படும் என வடிவேல் சுரேஷ் எம்.பி. முன்னதாக உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழியும் இன்றும் நிறைவேற்றப்படவில்லை.

 6 ஆயிரம் ரூபாவை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பயிற்சி, பயிற்சி என கொழும்பு வருவதற்கே மாதாந்தம் 5 ஆயிரத்துக்கு மேல் செலவாகின்றது. பொருளாதார சுமையை தாங்கமுடியவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் பெற்றோரை எதிர்பார்த்து காத்திருப்பது? பெண்களுக்குரிய பொருட்களை வாங்ககூட பணம் இல்லை. இதை யாரிடம் போய் சொல்வது'' என்று தனது மனக்குமுறலை பெயர் குறிப்பிடவிரும்பாத மலையக ஆசிரியை ஒருவர் வெளியிட்டார்.
« PREV
NEXT »

No comments