கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் போன்று, தமிழினத்தின் வரலாற்றை உலகிற்குச் சொன்னவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ‘அலை அழித்த தமிழ்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாவிலாறு மற்றும் சுன்னாகம் போன்ற விடயங்களை எழுத்தாளர்கள் எழுதியதைப் போன்று முள்ளிவாய்க்கால் பற்றியும் எழுதி, வரலாற்றை சரியான பாதையில் இட்டுச்செல்ல வேண்டுமென்றும், தமிழினத்தின் வரலாற்றை உலகறியச் செய்யவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment