இங்கிலாந்து தலைநகர் லண்டனின் நிதி மையமாக கருதப்படும் canary wharf பகுதி குண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. குறித்த பகுதியில் அனாமதேயமாக நிறுத்தப்பட்ட கார் வண்டி தொடர்பாகக் கிடைத்த தகவலை அடுத்து அப்பிரதேசம் பதட்ட நிலைக்கு உள்ளாகியது. பெருமளவிலான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அப்பிராந்தியத்தில் உள்ள இங்கிலாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான லைக்கா உள்ளிட்ட பல நிறுவன ஊழியர்கள் கட்டடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்தும் அளித்துவரும் அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக அமைகின்றன. பிரதான பொருளாதார கட்டிட மையங்களை இலக்கு வைத்தும், அதிக சேதங்களை இங்கிலாந்துக்கு ஏற்படுத்தவும் ஐஎஸ் கடுமையாக முயன்று வருவதாக பிரித்தானிய உளவுத்துறை ஏற்கனவே சுட்டிக் காட்டி உள்ளது.
இங்கிலாந்தின் பிரதான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான lyca உள்ளிட்ட பல்வேறு பிரதான முன்னணி நிறுவனங்களின் அன்றாட செயற்பாட்டுப் பணிகள் இன்றைய பதட்ட நிலையை அடுத்து பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.

No comments
Post a Comment