தாய்மடி உருவாக முழு காரணமான என் இனிய முகநூல் சொந்தங்களே ! நான் ஒரு திருநங்கை ....தயவுசெய்து என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விளக்கம் ஆராய வேண்டியதில்லை எனது சேவைகளை பாருங்கள் .... நான் இதுவரை ஒரு நல்ல சமூக சேவகியாக வாழ்கிறேன் .... என் சேவை ஆதரவற்றோர்களை பசி தீர்த்து அரவணைத்து செல்கிறது .... என்னை சேவகியாக மட்டுமே பாருங்கள் ....
மேலும் தற்போது அண்ணன் சீமான் அவர்களால் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சென்னை ஆர்.கே .நகர் தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தபட்டுள்ளேன் ....
இதன் மூலம் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற மனநிலை தவறியோர் மற்றும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக சேவைகளை செய்ய முடியும் ....
அதனால் எல்லோரும் தன்னலமற்ற சேவைகளை செய்ய முடியாது .. நான் குடும்ப வாழ்க்கை வாய்ப்பில்லாதவள் ஆதரவற்றோர்களை தனது குடும்பமாக அவர்களை என் குழந்தைகளாக நினைத்து காப்பாற்ற முடியும் .... அதனால் எனது இந்த முகநூல் பதிவை படிக்கும் உறவுகளே நீங்கள் அனைவரும் சாதி மத இன வேறுபாடு இல்லாமல் அதிமுக.... திமுக .... தேமுதிக .. மதிமுக ....விடுதலை சிறுத்தைகள் .. கம்யூனிஸ்ட் ....அஇசகம .. தமாகா .. ம.க. கொ. நா.இ. ... த.வா.க என்ற எந்த கட்சி பாகுபாடும் இன்றி பொது வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்து தமிழகம் முழுவதும் சேவை செய்ய ஒரு வாய்ப்பை தரவேண்டும் .... அப்போது தான் நீங்கள் எல்லாம் திருநங்கையரை ஏற்று கொண்டதாக அர்த்தம் இல்லையென்றால் இன்னும் எங்களை மனதளவில் ஒதுக்கி வைத்துள்ளதாகவே அர்த்தம் .... தாய்மடியை உருவக்கியது போல .... என்னை சட்டமன்ற உறுப்பினராக உருவாக்கி தாருங்கள் இதை படிக்கும் உறவுகள் ஒவ்வொருவரும் இதை உடனடியாக பகிருங்கள் ....முகநூல் போன்ற தளங்களால் எனது வெற்றி உறுதியாகும் ....வலைதளங்களின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது .... நான் திருநங்கை என்பதை இங்கே உள்ள என் போட்டோக்களின் மூலம் அடையாளபடுத்துகிறேன் ....மன்னித்து உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை சட்ட மன்ற உறுப்பினாரக தேர்வு செய்யுங்கள் ....
திருநங்கைகளும் மனிதர்கள் தான் எங்களுக்கு தமிழ் மண்ணில் அங்கீகாரம் தாருங்கள் தமிழக மக்களே
....
வலியுடன் .
திருநங்கை தேவி
No comments
Post a Comment