Latest News

April 11, 2016

புலம்­பெயர் தமிழ் மக்­களின் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட செயற்­பா­டுகள் சுபீட்­சத்­துக்­கான திற­வு­கோ­லாக அமையும் -லண்டன் தமிழர் சந்தை நிகழ்வில் விக்கி­
by admin - 0

நிதி, அறிவு, திறமை ஆகி­யவை உள்­ள­டங்­க­லாக புலம்­பெயர் தமிழ் மக்­களின் பொரு­ளா­தாரம் மற்றும் மனி­த­வளம் ஆகி­ய­வற்றின் வினைத்­திறன் மிக்­க­தான ஒழுங்­க­மைப்பும் ஒருங்­க­மைப்­புமே தமிழ் மக்­களின் சுபீட்­சத்தின் திற­வு­கோ­லாக அமைய முடியும் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி. வி. விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

பிரித்­தா­னிய தமிழர் வர்த்­தக சம்­மே­ள­னத்தின் ஒழுங்­க­மைப்பில் லண்டன் ஹரோவில் நேற்று முன்­தினம் பிர­மாண்­ட­மான முறையில் ஆரம்­ப­மான லண்டன் தமிழர் சந்தை 2016 நிகழ்வில் வீடியோ மூலம் வழங்­கிய செய்­தியில் முத­ல­மைச்சர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

உலக நாடுகள் எங்கும் வாழு­கின்ற தமிழ் மக்­களின் வர்த்­தக முயற்­சிகள் நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு செயற்­ப­டு­கின்­ற­போ­துதான் அவை தாய­கத்­திலே தமிழ் மக்­க­ளுக்கு அவர்­களின் சமூக, பொரு­ளா­தார அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு மட்­டு­மன்றி அர­சியல் அபி­லா­ஷை­களை வெற்­றி­கொள்­வ­தற்­கு­மான ஒரு பெரும் பல­மாக அமைய முடியும் என்றும் அவர் தன­து­ரையில் அழுத்­தி­யு­ரைத்­தி­ருக்­கிறார்.

முத­ல­மைச்­சரின் முழு உரையும் வரு­மாறு:

பிரித்­தா­னி­யாவில் வாழு­கின்ற தமிழ் மக்­களின் வர்த்­தக முயற்­சி­களை மேம்­ப­டுத்தும் நோக்கில் பிரித்­தா­னிய தமிழர் வர்த்­தக சம்­மே­ளனம் நடத்­த­வி­ருக்கும் 2ஆவது ‘தமிழர் சந்தை’ நிகழ்வு வெற்­றி­க­ர­மாக நடை­பெற எனது ஆசி­க­ளையும் பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.
பிரித்­தா­னி­யா­விலே தமிழ் மக்­களின் பல்­வேறு வித­மான சகல வர்த்­தக, வாணிப முயற்­சி­க­ளையும் உள்­வாங்கி ஒரு நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பாட்டின் மூலம் தமிழ் மக்­களின் பொரு­ளா­தார பலத்தை கட்­டி­யெ­ழுப்பும் நோக்கில் பிரித்­தா­னிய தமிழர் வர்த்­தக சம்­மேளம் முன்­னெ­டுத்­து­வரும் பணி­களில் இந்த ‘தமிழர் சந்தை’ நிகழ்வு முக்­கி­ய­மா­னது. வேலைப்­பளு கார­ண­மாக இந்த நிகழ்­விலே நேர­டி­யாக கலந்­து­கொண்டு உங்கள் எல்­லோ­ரையும் சந்­திக்க முடி­யாமல் இருப்­பதை இட்டு மனம் வருந்­து­கிறேன்.
உலக நாடுகள் எங்கும் வாழு­கின்ற தமிழ் மக்­களின் வர்த்­தக முயற்­சிகள் நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு செயற்­ப­டு­கின்­ற­போ­துதான் அவை தாய­கத்­திலே தமிழ் மக்­க­ளுக்கு அவர்­களின் சமூக, பொரு­ளா­தார அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு மட்­டு­மன்றி அர­சியல் அபி­லா­ைஷ­களை வெற்­றி­கொள்­வ­தற்­கு­மான ஒரு பெரும் பல­மாக அமைய முடியும். உலகம் முழு­வ­திலும் உள்ள தமிழ் மக்­களின் வர்த்­தக வாணிப செயற்­பா­டுகள் இவ்­வாறு கட்­ட­மைப்பு வடிவம் பெற்று யுத்­தத்­திலே சின்­னா­பின்­னப்­பட்­டுப்­போ­யுள்ள தாயக உற­வு­க­ளுக்­கான ‘உதவும் கரங்­க­ளாக’ பரி­ண­மித்­தி­ருக்­கு­மானால் சாம்­பலில் இருந்து உயிர்த்­தெழும் ‘பீனிக்ஸ்’ பறவை போல நாம் என்றோ மீண்டு எழுந்து பறந்­தி­ருப்போம். எனினும் உதவி பெறு­வ­திலும் நாம் தடை­களை எதிர்­நோக்கி இருந்தோம். அக் காலம் போய் உத­வி­களை தடை இன்றி பெறக் கூடிய காலம் விரைவில் வர இருக்­கின்­றது என்று நம்­பு­கிறோம்.

முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான மறு வாழ்­வாக இருந்­தா­லென்ன, போரிலே தமது கண­வன்­மாரை இழந்­துள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வித­வை­க­ளுக்­கான நல்­வாழ்­வாக இருந்­தா­லென்ன அல்­லது ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் சுபீட்­ச­மாக இருந்­தா­லென்ன, இவை அனைத்­துக்­கு­மான ஒரே தீர்வு , ஆட்­சியில் எம் நிர்­வா­கத்தில் எமக்கு முழு­மை­யான அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பதே.

நிதி, அறிவு, திறமை ஆகி­யவை உள்­ள­டங்­க­லாக புலம்­பெயர் தமிழ் மக்­களின் பொரு­ளா­தாரம் மற்றும் மனி­த­வளம் ஆகி­ய­வற்றின் வினைத்­திறன் மிக்­க­தான ஒழுங்­க­மைப்பும் ஒருங்­க­மைப்­புமே எமது மக்­களின் சுபீட்­சதின் திற­வு­கோ­லாக நிச்­ச­ய­மாக அமைய முடியும். 2014 ஆம் திகதி பெப்­ர­வரி 13 ஆம் திகதி பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­கு­ழுவின் தேசிய கருத்­த­ரங்கில் புலம்­பெ­யர்ந்த எமது தமிழ் மக்கள் எவ்­வா­றான உத­வி­களை தமது தாய­கத்­துக்கு நல்­கலாம் என்­ப­து­பற்றி ஏற்­க­னவே விரி­வாக கூறி­யி­ருந்தேன். அவர்­களின் உதவி எமக்கு அவ­சியம் என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருந்தேன். அண்­மையில் நாங்கள் தமிழ் மக்கள் பலர் குடி­யி­ருக்கும் கிங்க்ஸ்ரன் சேர்­பிட்டன் நக­ராட்­சிக்­குட்­பட்ட பிர­தேச உள்­ளூ­ராட்சி அல­குடன் எமது யாழ்ப்­பாண பிர­தே­சத்தை இணைத்து இரட்டை நிகழ்வு செயற்­பா­டொன்­றினை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம் ( Twining Programme ). பல மாதங்­க­ளாக தடை­களை சந்­தித்துத் தற்­போது தான் அச் செயற்­பாடு முன்­னேற்றம் கண்­டுள்­ளது. எனினும் முன்­னேற்ற அறி­கு­றிகள் வர­வேற்­கப்­பட வேண்­டி­யவை என்­பதை இங்கு குறிப்­பிட விரும்­பு­கிறேன். விரைவில் முத­ல­மைச்சர் நிதி­யமும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்று நம்­பு­கிறேன்.
யுத்­தத்­தி­னாலே சின்­னா­பின்­ன­மாகிப் போயுள்ள மக்­களின் நல்­வாழ்வு மற்றும் எமது பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­திக்­காக புலம்­பெயர் தமிழ் மக்­க­ளுடன் இணைந்து பணி ஆற்ற வட மாகாண சபை தயா­ராக இருக்­கி­றது. இந்த விட­யத்தில் பிரித்­தா­னிய தமிழர் வர்த்­தக சம்­மே­ளனம் எம்­முடன் கைகோர்த்து செயற்­படும் என்­பது எனது எதிர்­பார்ப்பு.

பிரித்­தா­னிய தமிழர் சம்­மே­ள­னத்தை முன்­மா­தி­ரி­யாக கொண்டு ஏனைய நாடு­களில் உள்ள தமிழ் வர்த்­தக முயற்­சி­யா­ளர்­களும் அமைப்பு ரீதி­யாக செயற்­பட்டு தமது வர்த்­தக செயற்­பா­டு­களை மேலும் மேன்மை அடைய செய்­வ­துடன் தாயக மக்­களின் துயர் துடைப்பு பணி­க­ளிலும் பங்­கெ­டுக்­க­வேண்டும் என்று இந்த சந்­தர்ப்­பத்தில் வேண்­டிக்­கொள்­கிறேன். ஒவ்­வொரு நாடு­க­ளிலும் உள்ள வர்த்­தக முயற்­சி­யா­ளர்கள் இத்­த­கைய நிறு­வன ரீதியான முயற்சிகளுடன் தாமும் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்பது எனது நம்பிக்கை. அப்பொழுதுதான் எமது சுபீட்சதுக்கான ஒரு ‘பொருளாதார இயக்கத்தை’ நாம் கட்டியெழுப்ப முடி யும். தமிழ் பேசும் மக்கள் உலகில் எங்கி ருந்தாலும் ஒற்றுமைப்பட வேண்டும். சமூக, பொருளாதார, கலாசார ரீதியாகவும், மொழி வாரியாகவும் நாம் ஒன்றிணைய வேண்டும்.

கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்ற ‘லண்டன் தமிழர் சந்தை’ அதை விட சிறப்பாக இம்முறை நடை பெற்று வெற்றிபெற ஆசி கூறுவதுடன் அதில் பங்கெடுக்கும் சகல தமிழ் வர்த்தக முயற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுதல் களையும் தெரிவித்துக்கொள் கிறேன்.
« PREV
NEXT »

No comments