Latest News

April 14, 2016

அமெரிக்க போர்க் கப்பல் அருகில் ரஷ்ய விமானங்கள்: ரஷ்யா விளக்கம்
by admin - 0



இவ்வாரத் துவக்கத்தில் பால்டிக் கடலில் அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கு அருகில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்தபோது எல்லாப் பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டன என ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க நாசகாரிக் கப்பலான யுஎஸ்எஸ் டொனால்ட் குக் பால்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது ரஷ்யப் போர் விமானங்கள் தொடர்ந்து அந்தக் கப்பலுக்கு அருகில் பறந்தன.
ஒரு போர் விமானம், கப்பலிலிருந்து வெறும் 9 மீட்டர் உயரத்தில் பறந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனஷென்கோவ், அந்தக் கப்பலைப் பார்த்த பிறகு ரஷ்ய விமானிகள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்ததாகத் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்த சம்பவம் தொடர்பாக வலியுடன் கருத்துத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments