அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. எனது பயணம் சமுதாயத்தை நோக்கியே உள்ளது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்று பல கட்டமாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளார்.
நேர்மையான அதிகாரியான சகாயம் அரசியலில் ஈடுபடவேண்டும் என்றும், தமிழக முதல்வராகவேண்டும் என்றும் கடந்த 6 மாதங்களாகவே கோரிக்கையும், எண்ணமும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டது. இதை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பேரணி நடைபெற்றது. மதுரையில் ஜனவரி மாதம் பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றது. ஆனால் சகாயம் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறிவருகிறார். சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த நேரத்தில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், எனது பயணம் சமுதாயத்தை நோக்கியே உள்ளது. தேர்தலில் நேர்மையான, தகுதியானவர்களை தேர்வு செய்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார். ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ, பரிசு பொருட்கள் கொடுத்தாலோ யாரும் வாங்கக்கூடாது என்றும் சகாயம் கேட்டுக்கொண்டார்
No comments
Post a Comment